24 special

தூங்கவே விடமாட்டீங்களா...? முதல்வருக்கு பறந்த 'அந்த' முக்கிய செய்தி...!

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

தேசிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் மகனும் அமைச்சருமான உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சு இருந்தது இது மட்டுமின்றி மறுபுறம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் செய்த குற்றங்கள் ஒவ்வொன்றும் வெளிவந்து சட்ட வழக்குகளை சந்தித்து வருகிறது. இது போதாது என்று கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகள் வேறு தற்போது தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக நிர்வாகிகள் இரண்டு கோஷ்டிகளாக இருந்து மோதி வந்ததன் காரணமாக அவ்வப்போது புகைச்சல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் தென்காசி மாவட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபனுக்கும் முன்பு அண்ணா அறிவாலயத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செல்லத்துரையின் ஆதரவாளராக கருதப்படுகின்ற மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ் செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மேடையிலே தள்ளு முள்ளும் ஏற்பட்ட விஷயம் அறிவாலயத்தை கோபப்படுத்தியது.


இதற்கிடையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான நாகர்கோவில் மாநகராட்சி மேயராகவும் உள்ள மகேஷ்கும் மேற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மனோ தங்கராஜிற்கு இடையே நீடித்த மோதலை கனிமொழி எம்பி நேரில் சென்று பஞ்சாயத்து வைத்து சமாதானம் பேசி வந்தார். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற I.N.D.I.A கூட்டணியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல தயாராகி கொண்டிருந்த முதல்வருக்கு அதிர்ச்சி தகவலாக நெல்லையில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் ஏற்பட அதனை சமாளிக்க அமைச்சர் தங்கம் தென்னரசை முதல்வர் அனுப்பி வைத்ததார். இப்படி தொடர்ந்து கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த பூசல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது, தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா, கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், நகர்மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை துவங்கி வைக்கும் பொழுது அப்பள்ளியின் ஆசிரியர் வந்த அனைவரையும் பெயர் குறிப்பிட்டு வரவேற்ற பொழுது கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா அவர்களின் பெயரை வாசிக்கும் பொழுது ஆசிரியர் அவரது கணவர் நெப்போலியன் பெயரையும் வாசிக்க தவறியதாக கூறி சர்ச்சையில் ஈடுபட்டனர். இதனால் நெப்போலியன் ஆதரவாளர்கள் கோபம் அடைந்து இது அரசு விழாவா அல்லது கட்சி விழாவா எது என்று தெரியவில்லை நகர்மன்ற தலைவரையும் உறுப்பினரையும் அழைக்காமலே ஒரு அரசு நிகழ்வு கட்சி நிகழ்வாக நடத்தப்படுகிறது என்று அங்கு இருந்த எம்எல்ஏவிடம் முறையிட்டதோடு நகர்மன்ற தலைவரின் மகன் அஸ்வந்த் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி போய் எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கும் நகர் மன்ற தலைவர் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு போலீஸ் புகார் வரையும் சென்றுள்ளது.

மேலும் இந்த பிரச்சனையில் திமுக கட்சி தேர்தலின் போது சமூகம் பணம் வசதி பார்த்து தான் பொறுப்புகள் கொடுக்கிறது என்று எம்எல்ஏ ராமகிருஷ்ணனுக்கு எதிராக அடிதடி ஈடுபட்ட சொந்த காட்சியை சேர்ந்தவரே குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் திமுக முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு மற்ற கட்சிகளின் கவனத்தையும் பெற்றது. ஒருபுறம் அண்ணாமலை தேனி, கம்பம், போடிநாயக்கனூர் போன்ற பகுதிகளில் தனது நடை பயணத்தை மேற்கொண்டு பாஜகவின் செல்வாக்கை உயர்த்தி வருகிறார் அதே சமயத்தில் மறுபுறம் அதே பகுதியில் திமுகவின் உட் காட்சி பூசல் வெடித்ததால் திமுகவைச் சேர்ந்த பாதி பேர் பாஜகவிற்கு தாவ தயாராக  உள்ளதாக முதல்வருக்கு செய்தி பறந்துள்ளது. இதனால் பூசல் வெடித்த பகுதியில் இருக்கும் சீனியர் அமைச்சர்களை அழைத்து பிரச்சினையின் நிலவரத்தைப் பற்றி கேட்டறிந்துள்ளார் முதல்வர். மேலும் இந்த விவகாரம் வரும் நாட்களில் பூகம்பத்தை கிளப்பும் எனவும் தெரிகிறது..