24 special

ரெண்டே வார்த்தையில் பளிச்சென்று சொல்லி உடன்பிறப்புகளை கதறவிட்ட ரோஜா.....

mk stalin, roja
mk stalin, roja

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக பெய்த கன மழையானது திமுக அரசிற்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி உள்ளது. முதலில் சென்னையை தாக்கிய மிக்ஜம் புயலால் சென்னை மாநகரம் முழுவதும் மழை நீரில் தேங்கியது அரசு தரப்பில் 4 ஆயிரம் கோடி செலவு  மழைநீர் வடிகால் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனாலே தற்போது சென்னை பாதுகாப்பாக உள்ளதாகவும் வெளியான அறிவிப்பு சென்னை மக்களை கோபப்படுத்தியது, மேலும் 2015ல் பெய்த மழையை விட 2023 இல் பெய்த மழை தான் அதிகம் என்று பரப்புரையை திமுக செய்தது சென்னை மக்களை அதிருப்தியில் தள்ளியது.அதற்கு இடையிலே மழை வெள்ளத்தின் போது மீட்பு பணிகளும் நடைபெறாமல் நிவாரண பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடிய போது அரசு தரப்பில் எந்த ஒரு உதவிகளும் செய்யப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட அந்தந்த பகுதிகளுக்கு உரிய அரசு அதிகாரிகள் ஒருவர் கூட அங்கு இல்லை என்றும் மக்கள் கடும் வேதனை தெரிவித்தனர். 


மேலும் சென்னை வெள்ளம் திமுகவை அகல பாதாளத்தில் தள்ளியது என்று அரசியல் விமர்சிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடும் மழை பொழிந்தது இந்த கடும் மழையானது இதுவரை தென் தமிழகம் சந்தித்திராத மழையாகவும், பெருமளவில் பாதித்த மழையாகவும் தென் தமிழக மக்களால் கூறப்பட்டது. இந்த மழை வெள்ள பாதிப்பிலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மீட்பிற்கும் திமுகவை சார்ந்த அமைச்சர்கள் வரவில்லை, அதிகாரிகள் ஒருவரும் வரவில்லை என்றும் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை பார்ப்பதற்கு கூட இப்பகுதி கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் வரவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டினர். 

இப்படித்தொடர் மழை வெள்ள பாதிப்புகளை சந்தித்த மக்கள் அரசை நோக்கி கேள்விகளை முன் வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் திமுக அரசு இவை அனைத்திற்கும் காரணம் மத்திய அரசு என்பது போன்ற வகையில் முழு பழியையும் மத்திய அரசின் மீது போட்டது, அதாவது எங்களுக்கு முறையான தகவல்கள் கிடைக்கவில்லை! நிவாரண நிதியும் கிடைக்கவில்லை என்ற பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக மத்திய அரசின் மீது வைத்தது திமுக! இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே நிதி அமைச்சர் டெல்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்து தகவல் முன்கூட்டியே கொடுக்கப்பட்டது என்றும் நிதி கேட்கப்படுவதற்கு முன்பாகவே கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது தமிழக முதல்வர் டெல்லியில் ஏன் இருந்தார் என்று அதிரடி கேள்விகளை முன்வைத்து, இதுதான் தமிழக முதல்வர் மக்கள் மீது கொண்ட அக்கறையா என்ற நிதியமைச்சரின் கேள்வி திமுகவிற்கு சவுக்கடியாக மாறியது.

இதனைத் அடுத்தும் திமுக இப்படி தொடர் குற்றச்சாட்டுகளை மத்திய அரசின் மீது முன்வைத்து வருவதற்கு ஆந்திர எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா உடன்பிறப்புகளுக்கு ஒரே அடியில் வாயடைக்க வைத்துள்ளார். அதாவது சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திரா எம்எல்ஏ ரோஜா மத்திய அரசு தரப்பில் இருந்து உதவி கொடுக்கப்படுகிறதா கொடுக்கப்படவில்லையா என்பது இரண்டாவது பிரச்சனை ஆனால் ஒரு மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு அம்மாநில மக்களை காப்பது அந்த குறிப்பிட்ட மாநில அரசின் முக்கிய பொறுப்பு! ஏனென்றால் அந்த மாநில அரசை நம்பியே மக்கள் ஓட்டளித்து முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் மாநில மக்களுக்கு துயரம் ஏற்படும்போது துணையாக இருக்க வேண்டியது அந்த மாநில அரசே அதைவிடுத்து விட்டு மத்திய அரசை குறை கூறுவது கூட சரியானதல்ல! என்று கூறியுள்ளார். நடிகர் ரோஜாவே திமுகவினரை இப்படி கலாய்த்து பேசியது தற்பொழுது அரசியல் ரீதியாக விமர்சனங்களை பெற்று வருகிறது.