24 special

விஜயகாந்தின் இறுதி சடங்கில் நடந்த நெகிழ்ச்சி!...அந்த மனசு தான் சார் கடவுள்!

Vijayakanth
Vijayakanth

கேப்டன் என் அவரது ரசிகர்களாலும், தொண்டர்களாலும் அழைக்கப்பட்ட விஜயகாந்த் மதுரையில் பிறந்து சென்னையில் கால் பதித்தவர். தன் உழைப்பால், திறமையால் திரையுலகின் உச்சத்தை தொட்டவர். தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்தின் பெயர் பறந்து ரசிகர்கள் மன்றம் தொடங்கப்பட்டது அது மூலமாக மக்களுக்கு நல்லது செய்து உதவி வந்தனர். சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் ஏழை எளிய மக்களுக்கும் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் உதவி செய்த வள்ளலாக மாறினார். இதனால் விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என பெயர் பெற்றவர் விஜயகாந்த்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனை ஏற்பட்டு நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியதால் அந்த இடத்தில நடந்த சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மக்கள் தொடர்ந்து வந்ததால் அவன் உடல் சென்னை தீவு திடலுக்கு மாற்றப்பட்டது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தீவுத்திடலில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிற்பகல் 1 மணிக்கு விஜயகாந்தின் ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்படுகிறது. இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டபோது, மக்கள் அதிகமாக வந்ததால் ரோடு முழுவதும் மக்கள் சூழ்ந்தனர். அப்போது மக்களுக்கு உதவி செய்தது பெரும் நெகிச்சியாக மாறியது. தேமுதிக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் நின்ற போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கேட்கும் போதெல்லாம் சளைக்காமல் தண்ணீரை அள்ளி கொடுத்த குடும்பத்தினர் கவனத்தை ஈர்த்தனர். பாட்டிலில் தண்ணீரை நிரப்பு அள்ளி அள்ளி தண்ணீர் கொடுத்தனர். விஜயகாந்த் செய்த நல்லது எல்லாம் அவரின் இறுதி சடங்கில் வேறு உருவத்தில் வருகிறது என்று சொல்லும் அளவிற்கு அங்கே இருந்த குடும்பத்தினர் மக்களுக்கு உதவியாக இருந்தனர்.

விஜயகாந்த் அவர்கள் சினிமாவில் நடிக்கும்போது அவரின் அலுவலகத்தில் தினம் தோறும் 30க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்குவாராம். விஜயகாந்தை வீட்டில் பார்க்க வருவோருக்கு உணவு வழங்குவாராம். அப்படி பட்ட மனிதன் இறந்த நாளில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மக்களுக்கு உதவி செய்தது விஜயகாந்த் ரூபமாக தெரிந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் என்பதற்கு சாட்சியாக விஜயகாந்த்மரணித்த நாளில் நடந்துள்ளது.