![CHRIST CHURCH](https://www.tnnews24air.com/storage/gallery/vd8pS1aJT6Wt8D6H0majfHX7xqOG4fe5OTX6eGpf.jpg)
இன்றைய காலங்களில் நேர்மையான வழியில் உழைத்து பணம் சம்பாதிப்பதை விட மோசடி செய்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையே அதிக அளவில் பின்பற்றி வருகின்றனர். நேர்மையாக உழைத்து பணம் சேர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும் இருந்து வருவதால் அதிகப்படியான மக்கள் எப்படியாவது குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்தது செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் உலகெங்கும் பல வகையான மோசடிகள் நடப்பதை நம்மால் செய்திகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது. மேலும் சில அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக கூறி இலட்சக்கணக்கில் படங்களை வாங்கி பல மோசடிகளையும் செய்து வருகின்றனர். இது போன்று பல மோசடிகள் உலகெங்கிலும் நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது மதத்தை வைத்து மோசடிகளை செய்வதற்கு ஆரம்பித்து விட்டனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா???ஆம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் 10 லட்சம் தருவதாக கூறி இந்த இளைஞரிடமிருந்து 5 லட்சத்தை வாங்கிவிட்டு அதன் பின் தலைமறைவாகிய கொடுமை ஏற்பட்டுள்ளது.
இப்போது ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதைப் பற்றி விரிவாக காணலாம்!!!ஐஎம்ஓ செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு சொக்கநாதன் என்ற ஐடியில் இருந்து இளைஞரை தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார். ஏற்கனவே அந்த இளைஞன் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதால், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் பத்து லட்சம் தருவதாக பண ஆசையை கிளப்பியுள்ளார். அதன் பிறகு அமெரிக்காவில் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்றும், மேலும் வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் சொல்லி அதற்கான பணத்தை அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். இந்த மோசடியை பற்றி அறியாத அந்த இளைஞநோ உண்மை என்று நம்பி ரூ.4,88,159-ஐ ஜி பே வை பயன்படுத்தி அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு பலமுறை அந்த நபருக்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார் இளைஞன். ஆனால் அந்த நபரோ அழைப்பை ஏற்கவில்லை. அதன் பிறகு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞன் உள்ள சைபர் கிரைமில் தான் ஏமாற்றப்பட்டதை குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் டி எஸ் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி ஆகியோரின் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்துள்ளனர்!!! இது போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர் யார் என்று பார்த்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையத்தில் வசித்து வரும் ஆனந்தம் நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகனான ராஜவேல் தான் இது போன்ற மோசடிகளை செய்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் காவல்துறை இவரை கைது செய்து தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறது. இவர் இந்த ஒரு மோசடியை தான் செய்து உள்ளாரா அல்லது ஏற்கனவே இதுபோன்று பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் இப்படி மோசடி நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பணத்திற்காக ஒரு மதத்தின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது போன்ற மோசடிகள் தொடர்ந்து நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே மக்கள் அனைவரும் இது போன்ற மோசடிகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை முன்வைக்கப்படுகிறது!!! தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.