![Shruti Haasan , Shantanu](https://www.tnnews24air.com/storage/gallery/woV9k5xon7k9QGWLQk59FoAJeHJCvuGbXZKcJLmR.jpg)
உலகநாயகன் கமலஹாசனின் முதல் மகளாக உள்ள ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் நடிப்பை தாண்டி பாடகர் ஆகவும் இசையமைப்பாளராகவும் அறியப்படுகிறார். தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க பாடல்களையும் இவர் பாடியுள்ள சமீபத்தில் கூட இனிமேல் என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்து நல்ல வரவேற்பையும் பெற்றார். முன்னதாக தமிழ் சினிமாவில் சூர்யாவின் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பல இளைஞர்கள் மனதை கட்டி போட்டார். அதற்குப் பிறகு ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து 3 படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் தனுஷ் தொடர்பில் இருப்பதாகவும் சில பேச்சுக்கள் சினிமா வட்டாரங்களில் உலா வந்தது.
அதுமட்டுமின்றி இந்த படம் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளில் உள்ள இலசுகளையும் தன் வசப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஸ்ருதிஹாசன் சித்தாத்துடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. இருப்பினும் அந்த தகவலும் உண்மை அல்ல என்ற வகையிலான வதந்திகளும் பேச்சுக்களும் சினிமா வட்டாரங்களில் சுற்றிவர லண்டனைச் சேர்ந்த மைக்கில் கோர்ஸ்லி என்பவருடன் ஸ்ருதிஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக கிசுகிசுக்களை பெற்று வந்த ஸ்ருதிஹாசனின் காதல் விவகாரம் லண்டன் பயனுடனாவது வெற்றி பெற வேண்டும் என ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் நினைத்து வந்த தருணத்தில் அவருடனும் சுருதிஹாசன் பிரேக் அப் செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவலுக்குப் பிறகு அட என்னடா இப்படி ஒரு நிலைமையான ஸ்ருதிக்கு என்ற வகையில் பலரும் பலவகையிலான அனுதாபங்களையும் விமர்சனங்களையும் சமூக வலைதளத்தில் தட்டி விட்டு வந்த சமயத்தில் தான் அசாம் மாநிலம் கௌகாத்தி நகரை சேர்ந்த ஓவியம் மற்றும் டிசைன் செய்வதில் வல்லவராக திகழும் சாந்தனு ஹசாரிக்காவை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாக செய்திகள் வெளியானது.மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கி இருவரும் லிவிங் டுகெதரில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது மேலும் இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் பொது வழியில் செல்லும் பொழுது ஒன்றாக செல்வதையும் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொள்வது பண்டிகை காலங்களில் ஒன்றாக கொண்டாடி அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டனர்.
இப்படியாக இவர்களது காதல் கடந்து சில ஆண்டுகளாக நீடித்து வந்தது, இதனால் இறுதியில் ஸ்ருதிஹாசன் தனது காதலரை முடிவு செய்துவிட்டார் ஆகவே சாந்தனுடன் ஸ்ருதிஹாசனின் திருமணம் உறுதியாகிவிடும் என்ற பேச்சுகளும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது, இந்த நிலையில் சாந்தனுடனும் ஸ்ருதிஹாசன் பிரேக் அப் செய்து விட்டதாக கடந்த இரண்டு நாட்களாக வதந்திகள் உலா வருகிறது.அதற்கேற்றார் போல் இன்ஸ்டாகிராமில் சுருதிஹாசன் மற்றும் சாந்தனு இருவரும் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்து கொண்டு தங்களது புகைப்படங்களையும் ஒருவரை ஒருவர் மாற்றி நீக்கி வருகின்றனர். இது குறித்து விசாரிக்கும் பொழுது கடந்த மாதத்தில் இருவரும் பிரிந்ததாகவும் தனிப்பட்ட கருத்துக்களில் இருந்து உடன்பாடு ஏற்படாததால் இருவரும் சுமூகமாக பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது, அதோடு ஸ்ருதிஹாசனை பிரேக் அப் செய்து விட்டீர்களா என சாந்தனுவிடம் வட இந்திய ஊடகம் ஒன்று கேள்வி கேட்டதற்கும் தயவு செய்து மன்னித்து விடுங்கள் அதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று ஒரே வார்த்தைகள் கூறிவிட்டு சாந்தனு சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆகவே ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனுவின் பிரேக் அப் தற்போது உறுதியாகியுள்ளதாகவும் இந்த முறையும் ஸ்ருதிஹாசனின் காதல் திருமணம் வரை நீடிக்க வில்லை என்ற செய்தியும் சினிமா வட்டார முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது.