நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் சினிமா விமர்சகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தொடந்து விஜயை விமர்சித்து வருகின்றனர். சினிமாவில் படம் நடித்தால் சம்பாதிக்கலாம் என இயக்குனர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலு விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி கடந்து சென்றது விமர்சனத்திற்கு மாறியுள்ளது.
கடந்த வருடம் விஜயகாந்த் மறைந்தபோது ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அதன் பிறகு நடந்த கலைஞர் 100 விழாவில் வடிவேலு கலந்துகொண்டது சர்ச்சையாக மாறியது. அதே போல இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு ஆடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்தார். வடிவேலுவின் தயார் கடந்த ஆண்டு உயிரிழந்தார். ஓராண்டு முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று திதி கொடுத்து, மோட்ச தீபத்தை நீரில் விட்டு ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தார்.
அங்கு கோவிலில் சாமி கும்பிடும்போது தன்னை மறந்து கண்ணீர் விட்டார் நடிகர் வடிவேலு இது அங்கு பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது. அதன் பிறகு செய்தியாளர்கள் வடிவேலுவை சூழ்ந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் குறித்தும், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய, வடிவேல் ஒரே வார்த்தையில், 'அவ்வளவுதான்' என நக்கலாக பதிலளித்து கிளம்புங்க என தெரிவித்தார். வடிவேலு “அவ்வளவுதான்” என்பதை வித்தியாசமான தொனியில் சொன்னதை வைத்தே அவர் விஜய் கட்சி அவ்வளவுதான் என்று சொல்லி விட்டார் என நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்ப ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களும் இணையத்தில் வடிவேலுவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் வடிவேலு ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும், கருத்து தெரிவிக்காமல் ஒரே வார்த்தையில் சொல்வது சரியானது அல்ல என்றும் செய்தியாளர்களை விரட்டியது முறையானது இல்லை என விமர்சனம் வருகிறது. நடிகர் விஜயுடன் சச்சின், வில்லு, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்திலும் விஜயுடன் நடித்திருந்தார் வடிவேலு. விஜய் மற்றும் வடிவேலுவுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுவிட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏற்கனவே விஜயகாந்த் மறைவுக்கு வராததால் வடிவேலுவை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். தற்போது விஜய்க்கு இப்படி ஒரு பதில் கூறியது மேலும் விமர்சனம் அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் வடிவேலு, விஜயகாந்துடன் பயணித்தாலும் திமுகவுக்கு சென்றபோது முழுமையாக திமுக நிர்வாகியாக மாறி அரசியல் பிரச்சாரம் செய்து வந்தார். திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் தான் வடிவேலு விஜயை நக்கலாக பேசியுள்ளார் என நெட்டிசன்கள் வடிவேலுவை விமர்சனம் செய்து வருகின்றனர். விஜய் 2026ல் தான் முழுமையாக இறங்கப்போகிறான் என்றும் யாருடன் கூட்டணியில் தேர்தலை சந்திக்க போகிறார் என்றும் கொள்கை குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.