24 special

எஸ்வி சேகரின் சாயம் வெளுத்தது....! பின்னணியில் இவர்களா....?

sv sekar
sv sekar

எஸ் வி சேகர் பாரத ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வந்தவர் அதற்கு முன் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏவாகவும் இருந்து இருக்கிறார், பாஜகவில் உறுப்பினராக இருந்தபோது தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பாஜக கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தார். மேலும் ஒவ்வொரு தலைவர்கள் பற்றியும் விமர்சனத்தை தெரிவிக்கும் எஸ்வி சேகர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் youtube சேனல்களிலும் தவறாக தனது கருத்தை தெரிவித்து பிறகு சர்ச்சையில் சிக்குவார். 


இந்நிலையில் தனது ட்விட்டர் பதிவில் தினகரன் பத்திரிக்கையில் வெளியான செய்தியை பதிவிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.இது மட்டுமல்லாமல் தற்போது திமுக கட்சியை சேர்ந்த செய்தி பத்திரிக்கையான தினகரன் பத்திரிக்கையில் அண்ணாமலையின் நடைபயணம் குறித்து கேலி செய்திருப்பது பாஜகவினரிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக கட்சியினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை நேரடியாகவே பல விமர்சனங்களை கிளப்பி வந்த நிலையில் தற்போது பத்திரிக்கை மூலமும் விமர்சனங்களை கிளப்ப ஆரம்பித்து விட்டனர் என பாஜகவினர் கூறுகின்றனர். 

அந்த பத்திரிக்கையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்லவில்லை அவர் பஸ் யாத்திரை சென்று வருகிறார் என்றும் போரடித்தால் மட்டும் நடை பயணம் மேற்கொள்கிறார் என்றும் 450 கிலோமீட்டர் கடக்க வேண்டிய மாவட்டத்தின் பகுதிகளை பெரும் இரண்டு கிலோமீட்டர் மட்டுமே கடந்து செல்கிறார் என்றும்  கூறியது பாஜகவினரிடையே தற்போது எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் நடை பயணத்தை முடித்துவிட்டு சிவகங்கை மதுரை மாவட்டம் வழியாக வந்த பகுதிகளை குறிப்பிட்டு அங்கு எத்தனை கிலோமீட்டர் நடந்துள்ளார் என்ற விவரங்களையும் பதிவிட்டிருந்ததுடன் மேலும் அவர் சரியாக நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை என்று அண்ணாமலை நடைப்பயணத்தை கடுமையாக கேலி செய்து தினகரன் பத்திரிக்கை அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கிய நடைபயணத்தில் இருந்து மதுரை வரை தொடர்ந்து பல கேளிக்கையான செய்திகளை வெளியிட்டிருந்தது. 

இந்த விவகாரம் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇவ்வாறு தினகரன் பத்திரிக்கையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தை கேலி செய்து வெளிவந்த செய்தியை எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டது பாஜகவினரிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எஸ் வி சேகர் பாஜகவில் இருந்தவர் ஆனால் தினகரன் பத்திரிக்கை திமுகவை சேர்ந்தது என்பதால்  தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியை எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பதிவில்  பதிவிட்டதும்  அப்போ இவ்வளவு நாள் எஸ்.வி சேகர் திமுகவுடன் கூட்டணியில் இருந்து உள்ளாரா என்று இணையதள வாசிகளால் எஸ்வி சேகருக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. 


எஸ்வி சேகர் தமிழக பாஜக தலைவரை விமர்சனம் செய்து twitterல் ட்வீட் செய்கிறேன் என்ற பெயரில் தானாகவே வந்து வம்பில் மாட்டிக் கொண்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும் அண்ணாமலை ஆதரவாளர்களும் திமுக ஆதரவு பத்திரிக்கை கண்டிப்பாக அண்ணாமலை யாத்திரையை பற்றி கேலி செய்து எழுதத்தான் செய்யும், அவர்கள் என்ன அண்ணாமலை யாத்திரையை புகழ்ந்து எழுதுவர்களா? அப்படி அவர்கள் கேலி செய்து எழுதியதை மோடி ஆதரவாளர் என கூறிக்கொண்டு இப்படி சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது திமுகவிற்கு மறைமுகமாக வேலைசெய்வதாகத்தான் தெரிகிறது! அப்போ இத்தனை நாளா திமுக தரப்புக்குத்தான் வேலை செய்துகொண்டிருந்தீர்களா என கேள்வியும் எழுப்ப துவங்கிவிட்டனர்.