தென்னிந்தியாவின் சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகர் பிரகாஷ் ராஜ்...! ஆனால் சமீபகாலமாக பிரகாஷ்ராஜ் பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜக மீதும் இடதுசாரி சிந்தனைகளுடன் தொடர்ந்து விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர் என்னைவிட சிறந்த நடிகராக உள்ளார் எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து விருதுகளையும் அவருக்கு தான் தர வேண்டும் என்றும் மேலும் பிரதமர் நரேந்திர மோடி மீது விமர்சனங்களை தொடர்ந்து வைப்பேன் என்றும் கூறி தொடர்ந்து பாஜக அரசு மற்றும் வலதுசாரி சிந்தனைகளை விமர்சித்து வருகிறார். இதனால் அவர் மீது லக்னோ கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி புத்த பூர்ணிமாவையொட்டி நேபாளத்திற்கு சென்று அப்பகுதியின் பாரம்பரிய உடைய அணிந்து புத்தர் பிறந்ததாக கூறப்படுகின்ற லும்பினிக்கும் சென் போதி மரத்திற்கு நீரூற்றினார் பிறகு நேபாள பிரதமரை சந்தித்து அவருடன் ஆறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இதனை அடுத்து நடிகர் பிரகாஷ்ராஜும் நேபாளத்தின் பாரம்பரிய உடைய அணிந்து கொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் எனது தலைவரால் ஊக்கம் பெற்றுள்ளேன் ஹாய் காய்ஸ் ஏன் நீங்களும் இதை முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்று பதிவிட்டு பிரதமரை விமர்சித்ததாக பாஜகவினர் கடும் கோபம் அடைந்தனர்.
அதாவது பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ஆடையை போன்ற அணிந்து கொண்டு இது போன்ற வித்தியாசமான உடைகளை ஏன் நீங்கள் அணியக்கூடாது என் தலைவரிடம் இருந்து நான் ஊக்கத்தை பெற்று உள்ளேன் என்று கூறி பிரதமரை கலாய்த்து உள்ளார் என பல விமர்சனங்கள் எழுந்தது.
மேலும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிரான பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இருப்பினும் நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான விமர்சனங்களை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டே வந்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிவமேகாவில் இருக்கும் தனியார் கல்லூரியில் சினிமா சமுதாயம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்று உள்ளது. இந்த கருத்தரங்கு எதிராக பாஜக மாணவ அமைப்பினரும் பாஜகவினரும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதாவது கல்லூரியில் தனியார் அமைப்புகள் கருத்தரங்கு நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டுள்ளார்.
கருத்தரங்கு நிகழ்ச்சி முடிந்ததும் பிரகாஷ்ராஜ் கல்லூரி விட்டு கிளம்பிய பிறகு அந்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் நுழைந்த மாணவர்கள் பிரகாஷ் ராஜ் சில பிரிவினைவாத கருத்துக்களை பேசியதாக கூறி அவர் நின்ற இடம் முழுவதும் பசுவின் கோமியத்தை தெளித்துள்ளனர். அதாவது பிரகாஷ்ராஜ் நாட்டின் பிரதமர், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆளும் பாஜக அமைச்சர்களை கேலி பேசுவது அவரது மனதில் பிரிவினைவாத கருத்துக்கள் இருப்பதை காட்டுகிறது இதன் காரணமாகவே மாணவர்கள் பிரிவினைவாத கருத்துக்களை பேசும் பிரகாஷ்ராஜ் வந்து சென்ற இடத்தை கோமியத்தை கொண்டு சுத்தம் செய்தனர் என கர்நாடகாவில் இருந்து வரும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரகாஷ்ராஜ் தனது இடதுசாரி சிந்தனை காரணமாக தொடர்ந்து உள்நோக்கத்துடன் அவதூறு பேசிவருகிறார், இவர் இப்படி பேசுவது அரசியல் நோக்கத்துடன் தவிர வேறு எதுவும் காரணம் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ் விவகாரத்தில் மாணவர்கள் எதிர்ப்பை காட்டியது பிரகாஷ்ராஜை இனி பேச யோசிக்க வைக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.