அமலாக்கத்துறை ரெய்டு, வருமானவரித்துறை சீல் வாய்ப்பு, அடுத்தடுத்த தலைவர்கள் ரெய்டு பட்டியலில் இருப்பது, உட்கட்சியில் ஆட்கள் அடித்துக்கொள்வது என பிரளயத்தில் இருக்கும் திமுகவிற்கு இடி விழுந்த மாதிரி இன்னோரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
திமுகவின் முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியல் வெளியீடு, முதல்வரின் மகன், மருமகன் ஆகியோரின் சொத்து குவிப்பு ஆடியோ, அமைச்சரவை மாற்றம், பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐ டி ரெய்டு, டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த தமிழக மக்கள், அரசு மதுபான கடைகளில் பாட்டில் ஒன்று கூடுதல் விலையை விற்கச்சொல்லி மிரட்டிய கரூர் கேங், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் ரெய்டு, அதில் பெட்டி பெட்டியாக ஆவணங்களை எடுத்துச் சென்ற ஐடி அதிகாரிகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை வங்கி கணக்கை முடக்கிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி வீடு மற்றும் தமிழக தலைமை அலுவலக அறையில் அமலாக்கத்துறை சோதனை, இரவில் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை, திடீரென நெஞ்சு வழியில் பதறிய செந்தில் பாலாஜி, தற்போது மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, பாதுகாப்பு படை வீரர்களால் திருப்பி அனுப்பப்படும் திமுக மூத்த அமைச்சர்கள், செந்தில் பாலாஜியின் ஜாமின் மறுக்கப்பட்டது.
அமலாக்கத்துறை கண்கணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பம், முதல்வர் மீது சிபிஐ விசாரணை நடத்த ஏற்பாடு, இப்படி திமுக கடும் பிரச்சனைகளிலும் தாங்கள் கையாண்ட ஊழல் மற்றும் தவறுகளில் இருந்து தப்பிக்க சில ஏற்பாடுகளையும் செய்து அடுத்து யார் மாற்றுவார் என்ற அச்சத்தில் இருக்கிறது. இப்படி பல சந்தர்ப்பங்களில் பல எதிர்ப்புகளை நோக்கி இருக்கும் திமுகவிற்கு தற்போது மற்றுமொரு பிரளயம் வரப்போகிறது. அதுவும் அந்த பிரளயத்தை தன் சொந்தக் கட்சியின் மூத்த தலைவரே பொதுவெளியில் கூறி ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் டி ஆர் பாலு, கொங்கு மண்டலம் தனக்கு கொடுக்கப்பட்ட தங்களுடைய இனத்தின் தலைவனுக்கு கொடுக்கப்பட்ட கொடுமை என தானாக வந்த இந்தக் கூட்டம் வந்து சேர்ந்துள்ளது. இப்படி சேர்ந்துள்ள இந்த கூட்டம் பாஜகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 12 மணி நேரத்திற்கு மேலாக செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையை மேற்கொண்டு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். அப்படி செந்தில் பாலாஜியின் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கமாக பேசினார்.
மேலும் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆதலால் ஓராண்டில் வர உள்ள ஆட்சிக்கு அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். நாளை கூட நாடாளுமன்றத் தேர்தல் வைத்தால் அதில் 11 நாடாளுமன்ற தொகுதிகளில் வெல்லக்கூடிய திறமையும் தகுதியும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உள்ளது என்று செந்தில் பாலாஜி புகழ்வது போன்று திமுகவை ஆபத்தில் தள்ளி உள்ளார்.
இன்னும் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது என்று திமுகவின் மேடையிலே திமுகவின் பொருளாளராக உள்ள டி ஆர் பாலு கூறியது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி கட்சி கெட்ட பெயரில் இருந்து முக்கிய அமைச்சர்கள் அமலாக்க துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளால் பிடிபட்டு, அடுத்த முறையில் சிபிஐயிடம் முதல்வர் சிக்குவார் என்று பேசப்பட்ட வருகின்ற நிலையில் தேர்தல் நடைபெற்றால் அது திமுகவிற்கு பின்னடைவாக அமையும் என திமுகவை ஆட்டம் காண வைத்துள்ளது டி ஆர் பாலுவின் அறிவிப்பு.