24 special

பொன்மாணிக்கவேல் எழுப்பிய கேள்வி..! அதிர்ந்து போன திமுக...!

Penmani label,mk stalin
Penmani label,mk stalin

இனி எங்களை போன்றோர் களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் கோவில்களுக்கு மின் கட்டணம் அதிகம் அதே நேரத்தில் ஏன் மற்ற மத வழிபாட்டு தளங்களுக்கு மின் கட்டணம் குறைவாக கொடுக்கிறீர்கள் என பொன் மாணிக்கவேல் எழுப்பி இருக்கும் கேள்வி ஆளும் திமுக அரசை அதிர செய்து இருக்கிறது.


அதோடு நில்லாமல் பொன் மாணிக்கவேல் தற்போது எழுப்பி இருக்கும் கேள்வி இளைஞர்கள் மத்தியிலும் அதிர செய்து இருக்கிறது முன்னாள் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல். தன் பதவி காலம் முடிந்தவுடன், ஆன்மீகம் மற்றும் ஆதீனங்களை கையில் எடுத்துக் கொண்டு இந்து அறநிலையத்துறைக்கு எதிராக போர் முழக்கம் செய்து வருகிறார்.

அடிக்கடி ஊடகங்களை சந்தித்து, கடத்தப்பட்ட 2500 க்கும் மேற்பட்ட சுவாமி விக்ரங்கங்கள், அந்தந்த கோயில் பயன்பாட்டுக்கு செல்லாமல் இன்னும் அருங்காட்சியத்தில் உள்ளன. ஆலயங்கள் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்?  ஆதீனங்கள் சொத்துக்கள் சூறையாடப்படுவதா ? கோயில் வருமானத்தில் அரசும்,  அரசு அதிகாரிகள் கும்மாளம் அடித்து விட்டு கோவில்களில் ஒரு வேலை விளக்கு கூட ஏற்ற முடியாமல் பற்றி அறநிலையத்துறைக்கு கவலை இல்லையா என்று கேள்வி மேல் கேட்டும்,

ஒரு படி மேல் போய் தமிழகம் முழுவதும்  உள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல  நூற்றாண்டுகளுக்கு முன்னால் காணாமல்  போன கோயில்களின் ஆதாரங்களை கையில் எடுத்து,அதை போலீசுக்கு மனுவாக தகவல் கொடுத்து கண்டுபிடிக்க சொல்லி 60, 70 ஆண்டுகால திராவிட அரசியலால் எப்படி ஆன்மீகம்  வேதனை அடைந்துள்ளது என்று பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ராஜபாளையம் விருதுநகர் மாவட்டத்தில் சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவப் பெருவிழா சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் ஐஜி பொன் மாணிக்கவேல்  கலந்து கொண்டார்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் பராமரிப்பு, திருப்பணி ஊழியர்கள் சம்பளம் என ஆண்டிற்கு 340 கோடி ரூபாய் செலவாகிறது.கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்கள் மூலம் வரும் வருவாய் மாதம் 28 கோடி ரூபாய் என்ற கணக்கில் செலவு கணக்கு காட்டப்படுகிறது.

இவ்வளவு தொகை வசூலிக்கட்டும் எடுக்கட்டும் இன்று வரை அவிநாசி கோவிலில் மின்கட்டணம் செலுத்தப்படாமல் இருக்கிறது. இந்து அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களுக்கு, இந்து சமயக் கோயில்களுக்கு மட்டும் ஏழு ரூபாய் 50 பைசா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களுக்கு இரண்டு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்தப் பாகுபாடு உச்சகட்ட அநியாயம் என்று அரசையும் அறநிலையத்துறையையும் கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார்.

மேலும் இன்று வரை தமிழகத்தில் உள்ள கோவில்களில் மூன்றரை லட்சத்துக்கு மேல் உள்ள சிலைகள் சட்டப்படி இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளன. சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சுவாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை வெறும் ஒரு சதவீதம் மட்டுமே மீட்டப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் கூறப்படுகிறது என்று பேசிய பொன் மாணிக்கவேல் மேலும்.

தென்காசி சங்கரன்கோவில் கோமதி அம்மன் சங்கரலிங்கனார் கோவில் திருப்பணியின் போது, பாண்டிய மன்னர் 11 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பல்லக்கு அர்ப்பணித்துள்ளார் அந்தப் பல்லக்கை சுத்தம் செய்வதாக தனிமைப்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மொத்தமாக திருடப்பட்டு உள்ளது என்று பெரிய வெடிகுண்டை குண்டை வீசிய முன்னாள் சிலை தடுப்பு அதிகாரி ஐஜி பொன் மாணிக்கவேல் இந்தப் புகாரை போலீசார் ஏற்காமல் தாமதம் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.

நான் சிலை தடுப்பு பிரிவில் பணியாற்றிய பொழுது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளையும் கைது செய்து ஸ்டேஷனில் ஒப்படைத்தேன். ஆனால் இதுவரை நடந்த விசாரணை உள்ளிட்ட எந்த தகவலும் எனக்கு அரசு தரப்பிலிருந்தோ போலீஸ் தரப்பில் இருந்தோ அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.பொன் மாணிக்கவேல் இனி வரும் காலங்களில் கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வெட்ட வெளிச்சமாக பேசுவார் எனவும், சைவ மதத்தை பாதுகாக்க தீவிரமாக ஒரு படையை திரட்டி இந்து மதத்தை பாதுகாக்க போகிறார் என்ற அறிவிப்பு பலரது தூக்கத்தை கெடுத்து இருக்கிறதாம்.