24 special

சேலம் முருகன் கோவில் சிலை வடிவமைப்பின்.. பின்னணியில் என்ன நடந்தது..?

Murugan Temple
Murugan Temple

முருக பெருமானை வழிபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தமிழகத்தில் முருக பெருமான் ஸ்தலம் அதிகமாக உள்ள பகுதிகளில் சேலம் மாவட்டமும் ஒன்று. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வட சென்னிமலை முருகன் கோவில் மக்களால் அதிகம் வழிபடும் தலமாக இருந்தது. அதன் பிறகு வந்த முதுமலை முருகன் கோவில் தமிழகமெங்கும் புகழை பெற்றது. இந்நிலையில், அதே சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முருகன் கோவில் ஒன்று இணையத்தில் விமர்சனங்கள் பெற்று வருகிறது.


சேலம் மாவட்டடம் புத்திரகவுண்டம்பாளையம் கடந்த 2022ம் ஆண்டு நிறுவப்பட்ட முருகன் கோவில் தான் தமிழகம் மட்டுமின்றி உலகமுழுவதும் கொண்டாடப்பட்டது. அதாவது, கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட இந்த கோவில் உலகிலேயே முருகன் சிலை மலேசியாவில் 140 அடி உயரத்தில் இருந்தது. அதன் பிற்காடு தமிழகத்தில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலை அதனை விட ஆறு அடி உயர்த்தி 146 அடியாக அமைத்தனர். மலேசியாவில் கட்டப்பட்டவர்கள் தான் தமிழகத்தில் வடிவமைத்தனர். கோவில் கட்டியதும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத நிலை உருவானது.

அதே சேலம் மாவட்டத்தில் மேலும் ஒரு முருகன் கோவிலை அமைக்க திட்டமிட்ட நிலையில், அது எதிர்பாராத வெற்றியை கொடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, சேலம் தாரமங்கலம் அருகே, ராஜமுருகன்  கோவிலில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் பிரதிஷ்டைக்காக சிலையை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது கோவில் நிர்வாகம். சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் முருக பக்தர்கள் பல்வேறு எதிர்க்கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ராஜமுருகன் கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது, பரபம்பரை பரம்பரையாக இந்த கோவிலை பராமரித்து வருகிறோம். 

ஒரு முறை சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் கோவில் சென்றிந்தோம் அங்கு உள்ள முருகன் சிலையை கண்டு ஆச்சிரியம் ஆனேன், அதேபோல் நமது ஆலயத்திலும் ஒரு சிலையை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலை செய்யும் நபர்களுக்கு இதனை கொடுத்தேன் ஆனால், எப்படி கட்டப்போறம் சிலையை என்பது குறித்து ஒரு வரைப்படம் கூட சிலை செய்யபவர்கள் காட்டவில்லை என தெரிவித்தார். இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன். நீங்கள் தெரிந்தவர் என்ற காரணத்திற்காகத்தான் இதனைச் செய்ய ஒத்துக்கொண்டேன் என கூறியுள்ளாராம். இந்த சிலை வடிவமைக்க 40 லட்சம் செலவிட்டதாக கோவில் நிர்வாகம் கூறுகிறது.

எனினும் அருகில் உள்ள கிராம புற மக்கள் கோவிலுக்கு வந்து மமுருக பெருமானை வழிபாடு செய்து தான் வருகிறார்கள். இணையத்தில் இது என்ன முருகனுக்கு வந்த சோதனை என்றும் இது திராவிட ஆட்சியில் கட்டப்பட்ட கோவில் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.