சினிமாவில் சிறிய சிறிய ரோலில் நடித்து தற்போது சினிமாவின் உச்சகட்ட விமர்சகராக கருதப்படுபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து பல்வேறு தகவலை வெளிப்படையாக பேசி வந்தவருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இவர் பேசிவருவது சர்ச்சையாக மாறி நடிகைகள் நேரடியாக கேள்வி எழுப்பியதால் சமீப காலமாக அவர் பேசி வருகின்ற ஒவ்வொரு பேச்சும் சினிமா வட்டாரத்தை மட்டுமின்றி மக்களையும் கடுப்படைய செய்து வருகிறது.
பயில்வான் ரங்கநாதன் சினிமாவை விட்டு ஓரம் கட்டிய நிலையில், தமிழ் சினிமாவின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசுவதும், விமர்சிப்பதும் அவர்களது அந்தரங்க வாழ்க்கை குறித்த தகவலையும் பொது மேடையில் கூறி பல நடிகைகளின் எரிச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகர்களை விட நடிகைகளை குறித்து அதிக விமர்சனத்தை முன் வைத்து வந்தார் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் உடன் நடிகை ஷகிலாவும் கலந்து கொண்டார். அப்போது பயில்வான் ரங்கநாதனிடம் ஷகீலா, இவ்வளவு பேசுறீங்களே உங்களது மகள் யாரை காதலிக்கிறார். அவள் காதலிப்பது ஒரு பெண்ணை என்று கூறினார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரங்கநாதன், 'நாக்கு அழுகிடும்’ என்று சொன்னார். அதற்கு ஷகீலா, உங்களது மகளை பற்றி சொன்னால் வலிக்கிறது அல்லவா அதுபோல்தான் நடிகைகளின் அம்மாக்களுக்கும் இருக்கும் என்று தரமான பதிலடி கொடுத்தார். இதனால், நெட்டிசன்களும் இணையத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷகிலா கேட்டது சரிதானா என்ற கேள்விக்கு எனது மகளை பற்றி தரக்குறைவாக பேசிய ஷகீலாவின் வாய் அழுகிவிடும். அவ விளங்கவே மாட்டா. எனது மகள் யாரையும் காதலிக்கவும் இல்லை, அவள் தன் பாலின ஈர்ப்பாளரும் இல்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி பேசுவது முறையல்ல என்றார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி பேசுவது முறையல்ல என மீண்டும் பதிவு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருவதால் இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் பலரும் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதுவரை நீங்கள் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து சொன்ன தகவல் எந்த ஆதாரத்தின் கீழ் வரும் என சரமாரியாக கேள்விகளை எழுப்புகின்றனர். இது தான் கர்மா சார் என பல்வேறு விதமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். ஆதரம் இல்லாமல் பயில்வான் ரங்கநாதன் பேசி வருவதாக பொதுவெளியில் பலரும் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.