உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரையும் பத்திரமாக உயிருடன் மீட்டு உள்ளனர் பாதுகாப்பு படையினர், கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலையில் உத்தர்காசி அருகே சில்க்யாரா பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை பணியின் போது சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 4.5 km நீள சுரங்க பாதையின் 25 முதல் 250 மீட்டர் வரையிலான இந்த பகுதி இடிந்தது திடீரென யாராலும் எதிர்பார்க்க முடியாத விபத்து. இதனால் உள்ளே சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவி தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர், 41 பேர் உள்ளே சிக்கியதாக தகவல் கிடைத்த உடனே ஒட்டுமொத்த அரசும் அவர்களுக்கு உதவி செய்து அவர்களை எப்படியாவது உயிருடன் மீட்டு விட வேண்டும் என இறங்கியது.
கிட்டத்தட்ட 17 நாட்கள் இரவும், பகலும் பாராமல் அந்த சுரங்கத்தில் எப்படியாவது துளையிட்டு அவர்களை உயிருடன் மீட்டு விட வேண்டும் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் இதற்கான முயற்சியில் இறங்கினர். தினமும் அடிக்கடி என்ன நடக்கிறது என பிரதமர் மோடியும் இதற்கான பணிகள் குறித்து கேட்டறிந்து வந்தார். எப்படியாவது இவர்களை மீட்டு விட வேண்டும் எனும்போது எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களது அரசியல் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர், பாருங்கள் அரசின் அலட்சியத்தால் 41 உயிர் பலியாக போகிறது என்றெல்லாம் வேறு பல தகவல்களை கூறினர்.
இது மட்டுமல்லாமல் அயல்நாட்டில் இருந்து உலகின் தலைசிறந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் வரவழைக்கப்பட்டார், அவரும் இந்த தொழிலாளர்களை எப்படி மீட்க வேண்டும் எப்படி இவர்களை உயிருடன் மீட்பது என்பது குறித்து மத்திய அரசின் நிபுணர் குழுவோடு அங்கே தங்கி வேலையை ஆரம்பித்தார். முதலில் அவர்களை மீட்பதை விட அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறிய காரணத்தினால் அவர்களுக்கு முதலில் நம்பிக்கை அளிக்கப்பட்டது, ஒரு துளையிட்டு அதன் வழியாக உணவு மற்றும் குடிநீர் அனைத்தும் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் தற்பொழுது நேற்று இரவு 17 ஆம் நாளை கடந்து அந்த சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள செய்தியாளர்கள் சிலரிடம் கேட்ட பொழுது உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையின் சுரங்கம் தோன்றும் பணியில் அங்கிருந்த கோவில் அகற்றப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் இந்த சுரங்க விபத்தே நடந்ததாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிப்பதாக கூறினர். இந்த மீட்பு பணி நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த கோவில் மூர்த்தியை பல்லக்கில் வைத்து சுரங்கத்தின் வாசலில் பிரதிஷ்டை செய்து பக்தி பூர்வமாக 41 தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டுமென அங்குள்ள மக்கள் பிரார்த்தித்து வந்தனர். இதனை இங்கு தமிழகத்தில் உள்ள பலரும் கிண்டல் செய்து வந்தனர், பாருங்கள் சுரங்க தொழிலாளர்களை மீட்பதற்கு இவர்கள் தயாராக இல்லை ஆனால் அங்கே ஒரு கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்றால் இவர்கள் தயாராக இருக்கின்றனர் என்பது போன்ற கமெண்ட்களை இங்குள்ள இடதுசாரிகள் பகிர்ந்து வந்தனர், இந்த நிலையில் உலகின் தலைசிறந்த நிபுணான ஆண்ட்ராய்டு டிக்ஸ் அவர்கள் இந்த சுரங்க தொழிலாளர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவரும் சென்று இந்த கோவிலில் மனமுருக பிரார்த்தனை செய்தார்.
அவர்கள் எப்படியும் மீண்டு வர வேண்டும் அவர்கள் நல்லபடியாக வந்தால் 41 குடும்பங்கள் பிழைக்கும் என அவரும் அந்த கோவிலில் வேண்டிய அடுத்த அடுத்த நாளே அந்த 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, ஒருபுறம் அந்த கோவில் மூர்த்தியை வைத்து வழிபட்ட காரணத்தினால் தான் 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர் என கூறினாலும் மறுபுறம் 17 நாட்கள் சுரங்கத்தில் மாட்டியவர்களை இரவு பகல் பாராது மீட்பு குழு எப்படியாவது மீட்க வேண்டும் என செய்த பணிதான் மீட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் 41 தொழிலாளர்களும் எந்த சேதமும் இல்லாமல் திரும்ப அவர்கள் குடும்பத்திடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர் என்பதில் நாடே தற்பொழுது பெருமிதம் கொள்கிறது.