Cinema

இவர்தான் காரணம்! அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி ஷகிலா கூறிய சர்ச்சை விஷயம்....!

vichithra,sakela
vichithra,sakela

தற்பொழுது நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா கூறியதுதான் இணையத்தில் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் அதிகப்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் ஒரு டாஸ்க்கில் விசித்ரா தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் படப்பிடிப்பின் தனது நடந்த கசப்பான அனுபவத்தை கூறி இதற்கு காரணம் ஒரு இயக்குனர் என கூறினார். 


அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகரையும் அவர் பெயரை குறிப்பிடாமல் தனக்கு பாலியல் ரீதியாக அழைப்பு விடுத்ததாக கூறினார். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அந்த ஹீரோ இவர் தான், இந்த காட்சியில் தான் விசித்ரா நடித்தார், இவர்தான் விசித்ராவை அழைத்து இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறி இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. 

அது மட்டும் அல்லாமல் யார் அந்த ஹீரோ? ஏன் நடிகர் சங்க தலைவர் அப்போது கேட்கவில்லை எனக் கூறி கேப்டன் விஜயகாந்த் பெயரும் சர்ச்சையில் அடிபட்டது. இந்த நிலையில் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடித்து வரும் நடிகை ஷகிலா தனக்கு ஏற்பட்ட ஒரு அட்ஜஸ்ட்மென்ட் நிகழ்ச்சி பற்றி கூறிய சம்பவம் தான் தற்பொழுது இணையத்தில் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ளது. 

ஒரு பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை ஷகிலா கூறிய பொழுது 'பிக் பாஸ் நடிகை விசித்ரா எனக்கு தோழிதான், நாங்கள் இருவரும் சேர்ந்து சில படங்களில் பணியாற்றி உள்ளோம். அவருக்கு நடந்த கொடுமையைப் பற்றி அவர் இப்பொழுது பேசி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதை யார் செய்தார்? எந்த ஹீரோ கொடுமை செய்தார்? என விசித்திரா குறிப்பிட்டு இருக்க வேண்டும்' என்றார். 

மேலும் தனக்கு நடந்த ஒரு அனுபவத்தையும் ஷகிலா பகிர்ந்துள்ளார் 'நான் இன்னும் தெலுங்கு திரையுலகில் வேலை பார்க்கிறேன், மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நான் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் பல போராட்டங்களை சந்தித்தேன். ஒரு கட்டத்தில் அல்லரி நரேசன் தந்தையும், எழுத்தாளரும், இயக்குனருமான இவிவி.சத்தியநாராயணா என்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி என்னை அவரது அறைக்கு வரச் சொன்னார், அதனால் எனக்கு உதறல் எடுத்து விட்டது. 

ஆனால் தற்பொழுது உங்கள் படத்தில் நடித்ததற்காக எனக்கு சம்பளம் வந்துவிட்டது, மீண்டும் உங்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு தேவை இல்லை எனக்கூறி பதில் அளித்துவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன்' என கூறியுள்ளார். 

மேலும் ஷகிலா கூறிய அந்த இயக்குனர் தற்போது உயிருடன் இல்லை, ஆனால் டோலிவுட் மீடியாக்களிடம் இது குறித்து நான் பேச தயாராக இருக்கிறேன் அவர் என்னை தனது அறைக்கு அழைத்தார். இதுதான் உண்மை என கூறியுள்ளார். 

இது தெலுங்கு திரையுலகில் மட்டுமில்லாமல், தமிழ் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் பிரபல இயக்குனரும், எழுத்தாளருமான இவிவி சத்தியநாராயணா பற்றி இப்படி ஷகிலா இப்படி அப்பட்டமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அவர் பல வெற்றிகரமான படங்களை உருவாக்கிய வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் அவரைப் பற்றி ஷகிலா இப்படி பாலியல் தொந்தரவு செய்தார்! என்னை படுக்கைக்கு அழைத்தார் என பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரை சுட்டிக்காட்டி பேசியது குறித்து தற்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது வரும் காலங்களில் தெலுங்கு திரையுலகில் மிகவும் சர்ச்சையாக வெடிக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது.