Cinema

புத்தியை காண்பித்த இடதுசாரிகள்.... தலையில் அடித்துக் கொள்ளும் சிவகுமார் குடும்பம்...

actor surya, ameer, ganavel raja
actor surya, ameer, ganavel raja

சிவகுமார் குடும்பத்தில் இருந்து சிவக்குமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் நடிகர்களாக உள்ளனர். ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் வலதுசாரியாகவும் மிகவும் ஆன்மீக ரீதியிலான பக்திகரமான குடும்பமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் ஈவேராவின் புரட்சி, ஈவேரா தான் அனைத்திற்கும் காரணம் எனக் கூறி புரட்சி பேசி போராளியாக மாறி பின்னர் அதன் காரணமாக விமர்சனங்களை தற்போது சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடந்து வரும் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான பிரச்சனையால் சூர்யாவின் குடும்பம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


அதிலும் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவக்குமாரின் நெருங்கிய உறவினர் இவர் அமீரை பற்றி குறிப்பிட்ட காரணத்தினால் தற்பொழுது அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்கரா என பலரும் களத்தில் சூர்யா குடும்பத்திற்கு எதிராக குதித்து விட்டனர். இந்த நிலையில் திமுகவின் அபிமானி, இடதுசாரிகளில் முக்கியமான இயக்குனர் கரு.பழனியப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 'பருத்திவீரன் பற்றி அமீர் பற்றி ஞானவேல் பேசிய பிறகு அமீர் பக்கம் எல்லாரும் வந்து நிற்கிறார்கள், இந்த அறிக்கை பருத்திவீரன் படம் பற்றி அல்ல ஞானவேலின் பொது குற்றச்சாட்டு பற்றி.

ஞானவேலின் வக்கிரமான உடல்நிலை பற்றி! எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்கிறாரே நான் சொல்கிறேன் 6 ஆண்டுகால தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சமயத்தின் தலைவராகவும் தயாரிப்பாளர் தொழிலாளர் இடையே சமூகம் ஏற்பட காரணமாக பணியாற்றிய அமீரை பார்த்த நான் சொல்கிறேன். சங்கத்தின் பணத்தில் அமீர் உணவு உண்டதில்லை' எனக் கூறி அமீரை பற்றி பலவாறு புகழ்ந்து இறுதியாக '100 குரல்கள் படித்த சிவக்குமார் வள்ளுவர் வாய்க்கு போய்க்காது என்பதை அறிந்த அவர் தயாரிப்பாளர் ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்டு சொல்ல வேண்டும், சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன்' எனக் கூறி கிட்டத்தட்ட சிவக்குமார் குடும்பத்திற்கு மிரட்டல் விடும் அளவிற்கு ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார். 

இடதுசாரிகளுக்காக ஆதரவாக பேச போய், இடதுசாரிகளுக்காக அவ்வப்போது அதிமுக ஆட்சியை மாநிலத்திலும், மத்தியில் பாஜக ஆட்சியையும் எதிர்த்து வந்த சூரியா, சிவக்குமார், கார்த்தி குடும்பத்திற்கு இப்படி இடதுசாரிகள் ஒரு பிரச்சனை என்ற உடன் அனைவரும் எதிராக நின்று விட்டனர். இது நமக்கு தேவையா என சூர்யா குடும்பம் புலம்புவதாக தகவல் கிடைத்துள்ளது! மொத்தத்தில் இடதுசாரிகள் முதுகில் குத்தி விட்டார்கள் இனி என்ன செய்வது யாரிடம் போய் நிற்பது என தலையில் அடித்துக் கொண்டு அழாத குறையாக சிவகுமார் புலம்பி வருவதாகவும் தெரிகிறது, ஏற்கனவே சிவக்குமார் குடும்பத்தில் இருக்கும் சூர்யா, கார்த்தி இருவருக்கும் பெரிய அளவில் படங்கள் ஓடவில்லை இந்த நிலையில் இந்த சர்ச்சை வேறு எழுந்திருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவகுமார் குடும்பம் புலம்பலில் வருகிறது. மேலும் இது குறித்து யாரிடமாவது பேசலாமா? யார் ஆதரவா யாவது கேட்கலாமா என்றால் எதுவும் முடியவில்லை கொங்கு பகுதியில் தற்போது செல்வாக்காக விளங்கி வரும் அண்ணாமலை ஆதரவை நாடலாமா அல்லது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவை நாடலாமா என சிவக்குமார் குடும்ப தற்போது யோசித்து வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.