திரையில் பாசம் காட்டுவது போல் நிஜத்திலும் நடிகர்கள் இருப்பதில்லை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அது போல தான் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது பிரபல பத்திரிகையாளர் விமர்சனம் வைத்துளளார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினிகாந்த் தொடந்து இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் மீது வந்த விமர்சனத்தால் வரக்கூடிய படம் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் முதல் இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்காமல் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த அளவுக்கு வளர்ச்சிக்கு காரணம் தன்னுடைய ஸ்டைல், நடிப்பு என அனைத்திலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் இருக்கைக்கு பலரும் ஆசைப்பட்டது உன்டு. தற்போது உள்ள விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற நினைப்பில் வாழ்ந்து வந்ததாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடிக்கு மேல் வசூலை சாதாரணமாக தட்டி தூக்கும்.
ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த படம் தோல்வியாக அமைந்ததால் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி ஜெயிலர் படத்தை சுமார் 600 கோடி வரை வசூல் ஈட்டியது. ரஜினிகாந்த் நடிப்பும் இயக்குனரின் கதையும் சிறப்பாக அமைந்தது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் எங்கள் தலைவனுக்கு தோல்வியே இல்லை என்று கொண்டாடி வந்தனர். ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் அவர் கமிட்டானார். ஒன்று லால் சலாம். இன்னொன்று வேட்டையன். தனது மகள் இயக்கியிருக்கும் லால் சலாமில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. படம் நாளை வெளியாகவிருக்கிறது. ஜெய்பீம் படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.
வேட்டையன் படம் தற்போது ஆந்திரா மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வருகிறது. இந்த வயதிலும் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ரஜினிகாந்த் பிறந்தநாள் மற்றும் பண்டிகையின் போது அவரது வீட்டின் முன்பு ஏராளனமான ரசிகர்கள் திரண்டு வாழ்த்து பெற வரிசையில் நிற்பார்கள். இந்த முறை பொங்கலுக்கு ரசிகர்கள் அப்படி கூடியபோது ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் கொந்தளித்து தீர்த்துவிட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. அப்போது திரைவிமர்சகர் ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே போயஸ்கார்டனில் இருந்த மற்றவர்கள் சாதாரணமாக வெளியில் வர முடியாத நிலைதான் இருந்தது. இப்போது ரஜினிகாந்த் ரசிகர்களால் அவரது வீட்டுக்கு அருகே இருப்பவர்களும் துயரமடைந்து இருக்கிறார்கள். கடைசியாக ஒரு பெண் வந்து மீடியாவில் பேசிவிட்டு சென்றாரே. அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ரஜினிகாந்த் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எப்படி பழகுகிறார் என்று. அவர் நல்ல முறையில் பழகியிருந்தால் அந்தப் பெண் ஏன் மீடியா முன் வந்து பேசப்போகிறார். நேராக ரஜினியின் வீட்டுக்கு தனியாக சென்று பக்குவமாக எடுத்து சொல்லியிருப்பாரே. நடிகர்கள் எல்லாம் திரையில்தான் நன்றாக இருப்பார்கள் நிஜத்தில் இல்லை என்பதற்கு இது உதாரணம்" என கூறினார்.
இதற்கு நெட்டிசன்களும் சினிமாவில் இருப்பது போன்று நிஜத்தில் அதற்கு மாறாகவே சில நடிகர்கள் இருக்கின்றனர். நாம் தான் இன்னும் ஆயிரம் வரை காசு கொடுத்து பார்க்க ஆசைபடுகிறோம். ஆனால், அவர்கள் அப்படி இல்லை ஒரு படத்தை முடித்துவிட்டு குடும்பத்தின் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுத்து விடுகிறார்கள். நாம் தான் செலவு சாய்த்து வருகிரம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.