
திருவாரூர், திருத்துறைப்பூண்டி சாலையில், கச்சனம் நால் ரோட்டிற்கு மேற்கு பகுதியில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் திருக்கோவில். இங்கு அமைந்திருக்கும் சனீஸ்வர பகவான் மிகவும் கருணை உள்ளம் நிறைந்தவர் என்று கூறுகின்றனர். பொதுவாகவே சனீஸ்வர பகவான் என்றாலே தீங்கு விளைவிப்பவர் என்று கூறி வருவார்கள். ஆனால் அவர் அதைவிட நன்மைகளை ரெண்டு மடங்கு இருக்கு அள்ளித்தரும் வல்லமை வாய்ந்தவர் என்று எத்தனை பேருக்கு தெரியும்??? ஆம் அதனால் தான் நம் முன்னோர்கள் சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சில பழமொழிகளையும் கூறி வருவார்கள். இந்த திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சனி பகவான் சிவபெருமானை வழிபட்டதாகவும் அதனால் தான் இந்த இடம் திருக்கொள்ளிக்காடு என்றும் அழைக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
மேலும் இந்த இடத்தில் தான் சனீஸ்வர பகவான் சிவபெருமானை வழிபட்டு ஈஸ்வரன் என்ற பட்டம் பெற்று அதன் பிறகு தான் சனீஸ்வர பகவான் என்றே அழைக்கப்பட்டார் என்றும் கூறி வருகின்றனர். பொதுவாகவே ஈஸ்வரன் பட்டம் என்றாலே மிகவும் உயர்ந்ததாகவும் அதனை பெற வேண்டும் என்றால் பல காலம் இறைவனிடத்திலிருந்து தவம் செய்ய வேண்டும் என்றும் அதுபோன்ற தவத்தினை செய்து தான் சனி பகவான் சனீஸ்வரர் என்ற பட்டத்தினை பெற்றுள்ளார் என்றும் கூறுகின்றனர். இந்த கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரம் உள்ளது. மேலும் சிறப்பாக இந்த கோவிலில் அமைந்திருக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்றை ஒன்று பார்க்காமல் பா வடிவத்தில் அமைந்துள்ளது. சனி பகவானுக்கு எதிரிலே பைரவர் சன்னதியும் அமைந்திருப்பது தனி சிறப்பாக உள்ளது. மேலும் இங்குள்ள சனி பகவானே வந்து வழிபட்டு செல்பவர்கள் எந்தவித பணக்கஷ்டமும் இல்லாமல் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் வாழ்வில் அதிகமாக கஷ்டப்பட்டு வருபவர்களும் இந்த ஆலயத்திற்கு சென்று வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு போதும் என்ற சொல்லும் அளவிற்கு பொன்னும், பொருளும் மற்றும் பதவியும் விரைவில் கிடைக்கும் என்று அங்கு வரும் பக்தர்கள் கூறி வருகின்றனர். அவ்வாறு இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்பவர்களுக்கு நினைத்தது கிடைத்தவுடன் மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து இங்கு அமைந்திருக்கும் சனீஸ்வர பகவானுக்கு மிகவும் பிடித்த எள்ளு சாதம், கரு நாவல் பழம், உளுந்து, கருநீல பட்டு மற்றும் இரும்பு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஆகியவற்றை படைத்து தங்களின் நேத்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக இந்த கோவிலுக்கு வந்து பல வேண்டுதல்களையும் முன்வைத்து அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் தலமாக இந்த திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலினை பற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யாரெல்லாம் பொருட்களை இழந்து, விமோசனமே இல்லை என்று வருந்தி வருபவர்கள் இந்த திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவானை சென்று வழிபட்டு வரலாம் என்று கூறுகிறார். மேலும் சனீஸ்வர பகவானுக்கு நேராக பைரவர் அமைந்திருக்கிறார் அவரின் குரு பார்வையில் அமைந்திருப்பதால் பல வேதனைகளில் அவதிப்பட்டு வருபவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றும், இந்த கோவிலுக்கு வராத விஐபிகளும் அரசியல்வாதிகளும் கிடையவே கிடையாது என்றும் கூறுகிறார். இதில் அமைந்திருக்கும் சிவன் மேற்கில் பார்த்து உள்ளார் என்றும் இது 2000 வருடங்களுக்கு பழமையான கோவில் என்றும் கூறுகிறார். மேலும் இந்த வீடியோவை பார்க்கும் நானும் இந்த கோவிலுக்கு செல்லாமல் இருக்கவே மாட்டார்கள் என்றும், இந்த கோவிலுக்கு செல்பவர்களுக்கு கண்டிப்பாக விமோசனம் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.