24 special

சட்டசபை தேர்தல் நோக்கி பயணிக்கிறோம்......எங்களது பணிகளை களத்தில் பார்ப்பீர்கள்!

Sarathkumar
Sarathkumar

கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு நீர் தர மறுத்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி  காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் கூடிய நிலையில் தமிழகத்திற்கு  விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு வனப்பகுதியில் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு விவசயிகளுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.


இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், விவசாயிகளுக்கு நீர் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாது. காவிரி விவகாரத்தில் விவசயிகள் கஷ்ட படுகின்றனர். குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தான் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அரசு அதனை ஏற்கமறுக்கிறது. இதனால் நமக்கு 6லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது. இங்க இருக்க கூடிய ஆட்சியாளர்கள் சாதகமாக இருந்தாலும் கர்நாடக அரசு தண்ணீர் கொடுப்பதாக இல்லை. இதற்கான விடிவு காலம் எப்போது வரும் என்றால் மத்திய அரசு கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தமிழக விவசாயிகளை கருத்தில் கொண்டு அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவிக்கிறேன். 

தொடர்ந்து பேசிய சரத்குமார், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் நங்கள் பயணிக்கிறோம் அதற்கான பணிகள் தீவிரமாக செயல் படுத்தி வருகிறோம். அன்மையில் நடந்த மண்டல அமைப்பு செயலாளர்கள் கூட்டத்தில் கூட தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தோம். டிசம்பர் 9ம் தேதி நெல்லை மாவட்ட கூட்டத்தில் ஆலோசித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்போம். 

தற்போது வரை எங்களிடம் கூட்டணியில் இணைந்து கொள்ள அழைப்பு வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் இன்னும் தொடங்க சில மாதங்கள் இருப்பதால், தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகலாம் அதன் பின் கூட்டணி யாருடன் என்பதை கூறுகிறோம். எங்களது இலக்கு 2026 தேர்தலை நோக்கி தான் செல்கிறோம். எம்பி தேர்தலில் நின்றால் 100 கோடி வேண்டும் என்கிறார்கள், சட்டப்பேரவை தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் 25 கோடி கொடுக்க கூறுகிறார்கள் இது ஜனநாயக நாடா அல்லது பன நாயகமாக  என்று தெரியவில்லை. 

நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் அவமதித்தது மற்றும் கர்நாடக நடிகர்கள் கர்நாடக பந்திற்கு ஆதரவுய் கொடுத்தது குறித்து கூறுகையில், காவிரி பிரச்சனைக்கு நடிகர்கள் தான் குரல் கொடுக்க வேண்டும் என்ற கருத்து கிடையாது கலைஞசனுக்கு அழுத்தம் தராதீர்கள். கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை. இந்த பிரச்சனைக்கு அரசு தான் தீர்வு கான வேண்டும் என்று தெரிவித்தார்.  திமுக அரசு நேற்று 5% வாகனங்களுக்கான வரியை உயரத்தி இருப்பது வருத்தமளிக்கிறது. எனவே பாமர மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.