தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் லியோ இந்த படம் வரும் 19ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் விஜயின் பட தயாரிப்பாளர் படத்தை வெளியிட முட்டு கட்டை போட்டுள்ளார். விஜய் நடித்த வாரிசு படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. வாரிசு படத்திற்கு தயாரிப்பாளர் தில்ராஜு படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி பல படங்களை வாங்கி விநியோகம் செய்வதிலும் தில் ராஜூ தீவிரம் காட்டி வருகிறார். தில்ராஜூக்கு லியோ படத்திற்கு போர் கோடி தூக்கியுள்ளார்.
பான் இந்திய படமாக உருவாகியுள்ள லியோ படம் வரும் 19ம் தேதி வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் ஹைப்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக, தமிழ்நாடு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படத்தின் விநியோகம் முடிந்துள்ளது. ஆனால், தெலுங்கில் மட்டும் விநியோகம் நடைபெறவில்லை. காரணம் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜ் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இதற்கு காரணம், விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரித்த வாரிசு படத்தை தமிழகத்தில், தற்போது லியோ படத்தை தயாரித்துள்ள லலித்குமாரின் 7 ஸ்கிரீன் நிறுவனம் தான் வெளியிட்டது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பண கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம் தெலுங்கானாவில் வெளியிடுவதற்கு எதிராக தில் ராஜ் போர்க்கொடி தூக்கியுள்ளார் என்று கூறுகின்றனர். அதோடு தெலுங்கனாவில் அவர் பிடிப்பில் இருக்கும் மல்ட்டி பிளக்ஸ், மால் அகையவைகளில் உள்ள தியேட்டர்களை கொடுக்க அவர் மறுப்பதாகவும் தகவல் வந்துள்ளது. லியோ படம் வெளியாக சராசரியாக ஒரு வார காலமே உள்ள நிலையில், தற்போது அங்கு லியோ படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது தில்ராஜுவை சந்தித்து 7 ஸ்கிரீன் நிறுவன தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை அறிந்த ரசிகர்கள் சமூக தளத்தில் "தில் ராஜ் சார் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க Fight வேணுமா Fight இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு என்று எல்லாம் பேசுநீங்களே இப்போ நீங்களே இப்படி பண்ணலாமா என்று வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் தான் இதுவரை லியோ படத்துக்கும் நடிகர் விஜய்க்கும் சச்சரவு கிளம்பியது. ஆனால் இப்போது மாநிலம் தாண்டி தெலுங்கானாவில் புது பிரச்னை எழுந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஏற்கனவே தெலுங்கானாவில் லோகேஷின் கடைசி படமான கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அங்கு லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் சராசரியான வரவேற்பு பெற்றது. இதனால் விஜய்க்கு அங்கு சிறிதளவு மார்க்கெட் சிதறியது. தற்போது அங்கு மார்க்கெட்டை அதிகரிக்க லியோ படத்தை நாம்போய் இருந்தார் விஜய். இப்பொழுது படமே அங்கு விநியோகம் ஆகாத நிலையில் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களும் சற்று சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.