உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் முதல்வராக இருக்கும் புஷ்கர் சிங் தாமி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்றதையடுத்து மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அதனால் தாமிக்காக யார் தொகுதியை விட்டுக்கொடுப்பார் என மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் சம்பவத் தொகுதி பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான கைலாஷ் சந்திர கெஹ்டாரி தனது பதவியை ராஜினாமா செய்ததோடு சம்பவத் தொகுதி மக்கள் முதல்வர் தாமி மீது அதிக அன்பு வைத்துள்ளதாகவும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதோடு முதல்வர் தாமிக்காக பதவி விலகுவது தனக்கு கிடைத்த பாக்கியம் எனவும் கூறியிருந்தார். இவரில் பதவி ராஜினாமாவில் தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த மே மாதம் 31 அன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலின் முடிவுகள் ஜூன் 2 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்காக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் உத்தரகாண்ட் யோகியின் சொந்தமாநிலமாகும். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகியின் தேர்தல் பிரச்சாரம் பெர்ம் பங்காற்றியதால் பிஜேபி மாபெரும் வெற்றியடைந்திருந்தது.
இதனால் யோகியின் பிரச்சாரம் மீண்டும் பலனளிக்கு என பிஜேபி நம்புகிறது. நேற்று தனக்பூரில் நடைபெற்றன பேரணியில் கலந்துகொண்ட யோகி அவர்கள் மக்களிடம் உரையாற்றினார். அடுத்து நான்கு பேரணிகளில் கலந்துகொள்ள இருக்கும் யோகி தேர்தல் பேரணியிலும் பங்குகொள்கிறார். இதனால் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதியாக வெல்வார் என பிஜேபி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
சம்பவத் தொகுதியை பொறுத்தவரையில் பிஜேபியின் கோட்டை எனக்கருதப்பட்டாலும் காங்கிரசின் கை அங்கே ஓங்கியுள்ளது. மேலும் வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில் ஆம் ஆத்மீ தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. இப்படி மும்முனைப்போட்டி நிலவினாலும் உத்தரகாண்ட் காங்கிரஸ் மாநில தலைவர் தாமிக்கு மறைமுக உதவிகள் செய்வதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டு வருகின்றன.