24 special

வடிவேவின் திரை பிம்பத்தை கிழித்தெறிந்த திரை விமர்சகர்.....! சிரிக்க வச்சதெல்லாம் பொய்யா?

Vadivel, Vijayakanth
Vadivel, Vijayakanth

நேற்று காலை விஜயகாந்த் இறந்த செய்தி வெளி வந்ததும் பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் வரை பல அரசியல் தலைவர்களும் தமிழக திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி வெளி மாநில திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் வெளி மாவட்டத்தில் இருந்தும் மக்கள் படையெடுத்து வந்து கேப்டான் விஜயகாந்தை நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் தளபதியாக மாறியதற்கு அடித்தளமாக இருந்த விஜயகாந்த் மறைவிற்கு வராமல் இருப்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்று இரவே விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.


இந்த நிலையில், நடிகர்கள் எல்லாம் நேரில் வந்தும் சமூக தலத்தில் பதிவிட்டும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர். தமிழ் திரையுலகை பொறுத்தவரை விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்காத ஒரே நடிகர் வடிவேலு தான் என நெட்டிசன்கள் கடும் கோபத்தை இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வடிவேலுவின் உண்மை முகம் குறித்து பதிவிட்டுள்ளார்." எத்தனையோ தடவ வடிவேலு விஜயகாந்த் குறித்து பொது மேடைகளில் இழிவு படுத்திருந்தாலும்.. கடைசி வரைக்கும் அவர் வடிவேலுவ தப்பா பேசுன மாதிரி ஒரு video கூட நீங்க பார்த்திருக்க முடியாது அதான் கேப்டன்.

வடிவேலு சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும்போது நல்ல துணி இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு ஐந்து செட் துணிகளை வாங்கித்தந்தார் கேப்டன். தனது நெருங்கிய நண்பர்கள், உடன் நடித்தவர்கள், ஆரம்பகாலத்தில் உதவி செய்தவர்கள் என எவரது இறப்பிற்கும் செல்லாதவர் வடிவேலு. உதாரணம்: விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டாமணி, விஜயகாந்த் மற்றும் பலர். வடிவேலுவுக்கு தெரிந்த திரையுலகத்தினர் சென்னையில் இறந்த தகவல் வந்தால் உடனே... மதுரைக்கு விமான டிக்கட் போட்டு ஓடிவிடுவதும், வேறு ஊர்களில் நடிகர்கள் இறந்தால்.. சென்னைக்கு வந்துவிடுவதும் இவரது யுக்தியாம். பல்வேறு படங்களில் உடன் பணியாற்றிய அல்வா வாசு மதுரைக்காரராம். வடிவேலு வீட்டிற்கு அருகேதான் அவரது வீடாம். அவர் இறந்த தகவல் வந்ததும்.. உடனே சென்னைக்கு வந்து விட்டாராம்". இவ்வாறு பதிவிட்டு வடிவேலுவின் உண்மை முகத்தை காண்பித்துள்ளார். இதற்கு நெட்டிசன்களும் சரமாரியாக வடிவேலுவை தாக்கி பேசி வருகின்றனர்.

விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட  ஒரு சின்ன பிரச்சனை வந்த பிறகு விஜயகாந்த்தை கடுமையாக வடிவேலு விமர்சனம் செய்தார். ஆனாலும் வடிவேலுவை எந்த  காலத்திலும் விஜயகாந்த் தரக்குறைவாக விமர்சனம் செய்ததில்லை. இந்தநிலையில் இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, நான் விஜயகாந்த்தை பேசியது தவறு, அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று வடிவேலு ஒரு வார்த்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் வடிவேலு என்ன செய்ய போகிறார் என்று. விஜயகாந்தின் உடல் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது அங்கு மக்கள் அலைகடலனே வந்து கண்ணீர் வீட்டு செல்கின்றனர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது .