இன்றைய தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகராகவும் இருப்பவர் நடிகர் விஜய், அதோடு இவரது ரசிகர்களால் இவர் தளபதி என்று அழைக்கப்பட்டுகிறார். அதிக சம்பளத்தை பெறும் நடிகராக திரை உலகில் உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கும் விஜய் பல தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஆரம்பத்திலே சறுகளை சந்தித்த விஜய்க்கு தோள் கொடுத்து தூக்கில் நிறுத்தியவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் கூறப்படுகிறது. அதாவது படிப்பில் நாட்டம் இல்லாமல் நடிக்கத்தான் செல்வேன் என்று தனது தந்தையான எஸ் ஏ சந்திரசேகரிடம் அடம்பிடித்து நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடித்தார் விஜய்! ஆனால் அந்த படம் விஜய்க்கு பெரும் தோல்வியையும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது.
அப்படத்தை காண்பதற்காக பல வழிகளில் விஜயின் தந்தை விளம்பரம் செய்திருக்கிறார், இருப்பினும் விஜயின் தோற்றத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்ததால் முதல் படத்தால் பெரும் மனம் உடைந்து இருந்தார் விஜய்.இருப்பினும் விஜய் தனது சிறுவயது காலத்திலிருந்து விஜயகாந்தின் அதிக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதாவது விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் அதனைத் தொடர்ந்து குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு என்று விஜயகாந்தின் அடுத்தடுத்த படங்களிலும் விஜய்யே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் நடிக்க ஆரம்பித்து அவரது முதல் படமே தோல்வியை சந்தித்து பெரும் மன உளைச்சலில் விஜய் உள்ளார் என்ற செய்தி அறிந்த விஜயகாந்த் விஜயின் அடுத்த படமான செந்தூரப் பாண்டி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்ததார்.
செந்தூரப் பாண்டி படம் என்பது விஜய்யின் திரை வாழ்க்கையில் திரும்ப முனையாக அமைந்த படம் 100 நாட்களை தாண்டி திரையரங்குகளில் ஓடி மக்கள் மனதில் விஜயின் முகத்தை பதிய வைத்தது. அதுமட்டுமின்றி குழந்தை நட்சத்திரமாக விஜயகாந்தின் முக்கிய படங்களில் நடித்த விஜயின் நடித்துள்ளார், அதோடு என்னை பெரும்பாலான படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் எஸ் ஏ சந்திரசேகர் என்பதாலும் விஜயகாந்த் செந்தூரப் பாண்டி படத்தில் நடிப்பதற்கு சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். இந்த தகவலை எஸ் ஏ சந்திரசேகரே ஒரு விழாவில் கலந்து கொண்டிருந்த பொழுது கூறி விஜயகாந்த்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.அதுமட்டுமின்றி விஜய்யின் செந்தூரப் பாண்டி படம் வெளியான பொழுது திரையுலகில் மிகப்பெரிய ஸ்டாராக இருந்தவர் விஜயகாந்த் இருப்பினும் தம்மை ஆளாக்கியவரின் மகன் என்பதற்காக விஜய்க்காக விஜயகாந்த் செய்தது பல பாராட்டுகளைப் பெற்றது.
செந்தூரப் பாண்டியன் படத்திற்கு பிறகு தான் விஜய் குறித்து ஏ பி சி என மூன்று சென்டர்களிலும் தெரிய ஆரம்பித்தது, இன்று விஜய் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் திரை உலகில் வளர உதவியவர் விஜயகாந்த் ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இருந்த போதிலும் அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொழுதிலும் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய பிறகும் விஜய் சென்று விஜயகாந்தை பார்க்கவே இல்லை விஜய்! நேற்று விஜயகாந்த் இறந்த பிறகு விஜய் இரவில் வந்து பார்த்தார் என்றாலும் விஜயகாந்த் முடியாமல் சிகிச்சையில் இருக்கும் வரையில் அவரைப் பார்க்கவே விஜய் சொல்லவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வந்துள்ளது, குறைந்தபட்சம் அவரது மகன்களுக்காவது விஜய் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் விஜயகாந்த் ரசிகர்கள்!