90களில் நடிப்பில் புகழின் உச்சிக்கே சென்று மாஸ் ஹீரோவாக இருந்தவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்தார். முன்னதாக கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் கேப்டன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்காக போது சென்று கொண்டு வந்தார். வெளிநாடுகளுக்கு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார் அதற்கு பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல வகைகள் சமூக வலைதளங்களில் வெளியாக அவரது மனைவி பிரேமலதா பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தெரிவித்து விரைவில் உடல் நலம் பெற்று உங்கள் கேப்டன் வீடு திரும்புவார் என்று தெரிவித்திருந்தார். அதன்படியே விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இந்த தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்த சில தினங்களில் தேமுதிக செயற்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு தனது ரசிகர்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளராக இருந்த பிரேமலதா பொதுச்செயலாளராக பொறுப்பேற்கப்பட்டார். அதற்கு பிறகும் தனியார் youtube சேனலுக்கு பேட்டியளித்த பிரேமலதா தனது கணவனின் உடல்நிலை குறைவிற்கு முக்கிய காரணம் கேப்டனின் கூடவே இருந்து அவரின் முதுகில் குத்தினார்கள்! என்றும் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அதை நினைத்து நினைத்தே கேப்டனின் உடல் நிலை இவ்வளவு மோசமானது என்று ஆதங்கப்பட்டு பேசி இருந்தார். இதனை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் உடல் நலக்குறைவால் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கேப்டனின் மரணம் குறித்து மியாட் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது அதாவது விஜயகாந்த் நுரையீரலில் நிமோனியா ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்ததாகவும் அதற்குப் பிறகு கடின முயற்சி செய்யப்பட்ட போதிலும் அவர் இன்று காலை மரணம் அடைந்ததாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து கேப்டனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் நேற்று காலையிலிருந்து கேப்டனின் மறைவு குறித்த செய்திகள் வெளியாக்கியதிலிருந்து அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் வீட்டில் குவிந்து வருகின்றனர் திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை சந்திக்க வந்து கொண்டிருக்கின்றனர் இதனால் சென்னை கோயம்பேடு பகுதியே கூட்ட நெரிசலில் திக்கு முக்காடி உள்ளது. இந்த நிலையில் கேப்டனின் உடலை பார்க்க வந்த டி ஆர், இதுபோன்ற சூழ்நிலையில் நான் எந்த இடத்திற்கும் இதுவரை வந்ததே இல்லை ஆனால் வெளிநாட்டில் இருக்கும் என் மகன் சென்னைக்கு திரும்ப இயலாத காரணத்தினால் உடனடியாக என்னை கண்டிப்பாக விஜயகாந்த் பார்க்கச் செல்ல வேண்டும் என்று கூறினார் அதோடு கேப்டனின் மறைவு என் மனதை வாட்டுகிறது, ஹீரோவாக சிம்பு நடித்த முதல் படமான காதல் அழிவதில்லை படத்தின் வெளியிட்டு விழாவிற்கு வந்தவர் கேப்டன் அதுமட்டுமின்றி சிம்பு சிறுவனாக இருக்கும்போதும் சரி, நடிகர் சங்க தலைவராக இருக்கும்பொழுது சரி சிலம்பரசனை தட்டிக் கொடுத்து வளர்த்தவர் கேப்டன் என்ற காரணத்திற்காக எனக்காக நீங்கள் அங்கு சென்று அவரை பார்க்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார். இதனால் நன்றி மறக்காத சிம்பு என ரசிகர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கேப்டன் விவகாரத்தில் சிம்புவை விட அதிகமாக விஜய்தான் நன்றியுடன் இருக்க வேண்டும் ஆனால் விஜய்க்கு அது இல்லை பார்த்தீர்களா எனவும் விமர்சனத்தை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.