சமீபத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கான இறுதி கட்ட பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்து தேர்தலும் நடந்து தேர்தல் முடிவுகளும் வெளியானது. முன்னதாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் முன்னாள் திமுக தலைவரும் தமிழக அமைச்சருமான கருணாநிதி குறித்த சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றை பாடினார் இது சமூக வலைத்தளம் முழுவதும் வைரலானது. இதனை அடுத்து திமுக ஐடி வின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் சாட்டை துறைமுகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இதனை அடுத்து தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகனை நேரடியாகவே அங்கு சென்று போலீசார் கைது செய்து அவரது வாகனத்திலேயே அவரை அழைத்து வந்தனர். மேலும் கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு மேல் போலீசார் சாட்டை துரைமுருகனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பிறகு திருச்சி மாவட்டம் முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி சாட்டை துரைமுருகனை கைது செய்வதில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி அவரை நீதிமன்ற காவலில் வைக்க தேவையில்லை என விடுவித்தார். சாட்டை துரைமுருகன் அதிரடியாக ஏதோ ஒரு பாடல் பாடியதற்காக கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் பலர் துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு தங்களது விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன் வைத்தனர். ஏனென்றால் தமிழகத்தில் தொடர்ச்சியாக சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகும் வகையிலான பிரச்சனைகள் நடந்து வர அதன் மீதான நடவடிக்கைகளை எடுக்காத இந்த திமுக அரசு தங்களுக்கு எதிராக யாரேனும் பேசுகிறார் என்றால் அவரை கைது செய்வதற்கு மட்டும் தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறது என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை செய்தியாளர்கள் சந்திப்பில் பாடி இந்த பாடலை பாடினால் கைது செய்கிறீர்கள் அல்லவா தற்போது நானும் பாடியிருக்கிறேன் என்னையும் கைது செய்யுங்கள் என்று திமுகவிற்கு நேரடியாகவே சவால் விட்டார்.
இதனை அடுத்து சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது மேலும் தனது தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு பாடலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடியதால் எனக்கு தூக்கமே வரவில்லை என்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாமக்கல் எஸ்பியிடம் அமுதா என்ற பெண் வழக்கறிஞர் பரபரப்பான புகாரை அளித்துள்ளார். இப்படி சென்னை, நாமக்கல் மாவட்ட பல பகுதிகளில் இருந்து சீமானுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டு வருகிற நிலையில் உண்மையில் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது. ஏனென்றால் சீமான் எந்த ஒரு கூட்டணியையும் நாடாமல் அனைத்து கட்சியையும் விமர்சனம் செய்பவர் அதிலும் குறிப்பாக திராவிட மாடல் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற திமுக அரசை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருபவர்.
மேலும் சமீபத்தில் கூட பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தொடர்ச்சியாக சீமானின் வாய்க்கொழுப்பு அதிகமாகி வருகிறது, கற்கோட்டையில் உள்ள திமுக, அவர் எரியும் கல்லிற்கு திரும்ப தாக்குதல் செய்ய நினைத்தால் அவரால் தாங்க முடியாது. இதனால் நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஆகவே சவுக்கு சங்கர் மற்றும் சாட்டை துறைமுருகன் வரிசையில் சீமானும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.