சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து சட்டமன்ற தேர்தலிலும் சிறப்பான வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக 2026 சட்டமன்ற தேர்தல் வேலைகளை தற்போதே ஆரம்பித்தது திமுக. அதன்படி சமீபத்தில் அமைச்சர் கே என் நேரு தலைமையில் எ வா வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகிய அமைச்சர்களும் ஆர் எஸ் பாரதி ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை திமுக தலைமை அமைத்தது. இதற்கு அடுத்து அந்த ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடந்ததை அடுத்து திடீரென கடந்த 23ஆம் தேதி உதயநிதியின் முகாம் அலுவலகமான குறிஞ்சி இல்லத்தில் தொகுதி பார்வையாளர்களுக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விருந்து திமுக தலைமை தொகுதி நிர்வாகிகளுக்கு என்ன ஆலோசனையை வழங்கியது என்பது குறித்து விசாரிக்கும் பொழுது, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களாக இருந்தவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தலைமை சார்பில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தான், இவர்களின் பங்களிப்பு இல்லை என்றால் 40க்கு 40 வெற்றி கிடைத்திருக்காது அதன் காரணமாகவே குறிஞ்சி இல்லத்தில் அவர்களுக்கு என்று பிரத்தியேகமாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும், தேர்தலில் வெற்றிக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது அதுவும் அவசர அவசரமாக தான் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் விருந்திற்காக நாங்கள் அனைவரும் சென்ற பொழுது குறிஞ்சி இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த லிஸ்டில் உள்ள பெயர்களின் படியே எங்களை உள்ளே சொல்ல அனுமதித்தார்கள் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,
பிறகு இந்த விருந்து மேடையில் யாரையும் பேச அனுமதிக்கவே இல்லை ஒருங்கிணைப்பு குழு சார்பாக அதன் தலைவர் கூட பேசாமல் உதயநிதி தான் பேசினார். எல்லாரையும் பேச அனுமதிப்பார்கள் என்று நினைத்தால் அஞ்சுகம் பூபதி, கோகுல் மற்றும் எஸ்கேபி கருணா ஆகிய மூன்று பேர் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள் அவர்களது தொகுதிக்குள் நடக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவார்கள் என்று பார்த்தால் இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி உழைப்பை அங்கீகரித்து விருந்து கொடுத்ததற்கு தலைமைக்கு நன்றி என்று தங்கள் பேச்சு முடித்துக் கொண்டார்கள் என்று இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி தொகுதி பார்வையாளர்கள் அனைவருக்கும் உதயநிதியை பார்ப்பது பெரிய விஷயமாக இருக்கும் பொழுது அவர்களால் எப்படி புகார்களை மட்டும் கூற முடியும் என்றும், வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இந்த விருந்தில் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்று தொகுதி பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விருந்திற்கு வெளியே நின்ற சில நிர்வாகிகளும் பொறுப்பாளர்கள் மட்டும்தான் தேர்தலுக்காக வேலை பார்த்தார்களா? நாங்கள் எல்லாம் பார்க்கவில்லையா எனக் கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சி அறிவாலயத்தில் நடத்தி இருந்தால் எங்களுக்கும் கட்சி ரீதியில் கூடுதலான அங்கீகாரம் கிடைத்திருக்குமே என்று இந்த விருந்தில் கலந்து கொண்ட தொகுதி பார்வையாளர்கள் புலம்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தான் திமுக கட்சியை நிலவரம் சரியில்லை என்று திமுக தலைமை புலம்பி வர அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தேர்தல் வேளையில் நாம் ஈடுபடுவோம் உதயநிதி முகத்தை காட்டி வெற்றி பெற்று விடுவோம், முதலில் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை தீர்ப்போம் என திமுக தலைமை திட்டமிட்டு இந்த ஒருங்கிணைப்பு குழு மற்றும் பொறுப்பு பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தை ஏற்படுத்தியது கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை மறக்க அடித்ததான் என்று கூறப்படுகிறது இருப்பினும் இந்த திடீர் விருந்து ஏற்பாடு கட்சிக்குள் மேலும் சில புகைச்சலை தான் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.