![vijayadharani](https://www.tnnews24air.com/storage/gallery/6oukunJ9i2uOrFmitSwmE0ig8r9KmDFZ2ptE3IqA.jpg)
லோக்சபா தேர்தலுக்காக அரசியல் களத்தில் அனல் பறக்கும் படியான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதோடு இண்டி கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இண்டி கூட்டணியை விட்டு பிரிந்து பாஜகவில் இணைந்தது இண்டி கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து இந்த எதிர்கட்சிகள் கூட்டணியும் சற்று சிதைவடைய ஆரம்பித்தது அதே நேரத்தில் மற்ற கட்சிகளை சேர்ந்த எம் பி, எம் எல் ஏக்கள், முக்கிய பிரமுகர் பாஜக பக்கம் திரும்ப ஆரம்பித்தார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக போட்டியிட்டு மூன்று முறை அதே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்தவர் விஜயதாரணி. ஆனால் திடீரென்று இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ளார். அதோடு காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி, சிறுவயதில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்த நான் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான இந்த கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, அதனால் தற்பொழுது நான் பாஜகவில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது அதனால் அவருடன் சேர்ந்து பணியாற்றுவதற்காகவே தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறினார். இப்படி 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக விளவங்கோடு எம் எல் ஏ வாக தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்று வந்த விஜய்தாரணி திடீரென்று பாஜகவை இணைந்தது காங்கிரஸ்ருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் தரப்பினர் விஜயதாரணிக்கு எதிரான கருத்துக்களை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் எதற்காக காங்கிரஸிலிருந்து வெளிவந்தேன் என்பது குறித்த முழு தகவலையும் தற்போது தனியார் பத்திரிகை ஒன்றிற்கு விஜய தாரணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், காலங்காலமாக எனது தாய் காங்கிரஸ் கட்சியில் இருந்து உள்ளார் நானும் எனது அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்தேன் ஆனால் அவர்கள் என் அம்மாவிற்கும் எந்தவித மரியாதையை செய்யவில்லை அதற்குரிய வருத்தம் அவர்களிடமும் இருந்தது, அதோடு ஒரு எம்எல்ஏ சீட்டு வாங்குவதற்கு நான் படாத பாடுபட்டேன் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்து தலைமையிடம் கேட்கும் பொழுது அப்பொழுது எந்த ஒரு கூட்டணி கட்சி வேட்பாளரும் நின்று ஜெயிக்காத ஒரு இடமாக இருந்த விளவங்கோடு தொகுதியை எனக்கு கொடுத்தார்கள், அங்கு நான் என்னுடைய முயற்சியால் மக்களின் ஆதரவுகளை பெற்று மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டேன், ஆனால் இதற்கு கட்சி தலைமை தரப்பிலிருந்து எந்த ஒரு உதவியும் எனக்கு கிடைக்கவில்லை அவர்கள் தலைமைப் பண்புகளில் பெண்களுக்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதை கொடுக்காமல் புறக்கணிப்பார்கள்!
திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பதே காங்கிரஸ் கட்சியில் இருக்காது! பாஜகவினர் பெண்களுக்கு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள் அப்படி பாஜகவின் சூழ்நிலைகளை பார்க்கும் பொழுது காங்கிரஸ்சில் எந்தவித தலைமை பொறுப்பில் பெண்கள் வரக்கூடாது குறிப்பாக தமிழகத்தில் இருந்து யாரும் வரக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் காங்கிரஸ் செய்த பல குளறுபடிகளையும் லிஸ்ட் போட்டு நாட்டில் நடந்த பல வன்முறை சம்பவங்கள் அனைத்துமே காங்கிரஸ் ஆட்சிக்கு தான் நடந்தது என்று கூறி நான் தலையசைத்தால் காங்கிரஸ் கூடாரமே காலி என்ற வகையில் விஜயதாரணி பரபரப்பான தகவல்களை இந்த நேர்காணலில் கூறியுள்ளது காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து விஜயதாரணி தரப்பில் விசாரித்த பொழுது, இனி காங்கிரஸில் இருந்து அதிக அளவில் ஆட்கள் பாஜகவில் சேருவார்கள் என சில தகவல்களை கசியவிட்டார்கள்...