24 special

ராமர் கோவில் ஏற்படுத்திய பாதிப்பு திடீரென அந்தர்பல்டி அடித்த அமைச்சர் சேகர்பாபு!

sekar babu, ayothi temple
sekar babu, ayothi temple

இந்தியா முழுவதும் தற்பொழுது அனைத்து இந்து மதத்தினரும் ஒரு முக்கிய விழாவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் அது அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா! இந்தியாவில் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் இக்கோவலின் திறப்பு விழாவை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் பல வருட போராட்டங்களுக்குப் பிறகு 2019-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தியில் ராமருக்கான கோவில் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அன்றிலிருந்து அதிவேகமாக பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தேதி குறிக்கப்பட்டு இறுதி கட்ட வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


அதுமட்டுமின்றி இவ்விழாவில் பல முக்கிய அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கும் இதில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் நான்கு வருடங்கள் கூட மிக எளிதாக சென்று விட்டது ஆனால் இந்த பத்து நாட்களை எளிதாக கடக்க முடியவில்லை என்ற வகையிலும் ராமர் கோவிலின் திறப்பு விழாவிற்கான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது உலகம் முழுவதிலும் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவிலுக்கான சிறப்பம்சங்கள் மற்றும் அதன் சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இக்கோவில் இரண்டு தளங்களில் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதான கருவறையில் ராமர் சிலையும் முதல் தளத்தில் ஸ்ரீராம் தர்பாரும் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இக்கோவிலில் ஐந்து மண்டபங்களும், வளாகத்தின் நான்கு மூலைகளிலும் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி அயோத்தி ராமர் கோவில் முழுவதுமே எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்றும் கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர் காம்பாக்டுகளால் செய்யப்பட்ட கான்கிரீட் அடுக்குகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும், கோவிலின் கட்டுமான பணிகள் முற்றிலுமே பாரதத்தின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.மேலும் அயோத்தி ராமர் கோவிலில் 42 கதவுகளில் தங்கமூலம் பூசப்பட்டுள்ளதாகவும், கோவிலின் திறப்பு விழாவை  அமெரிக்க டைம்  ஸ்கொயர் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படி நாடு முழுவதும் நாட்டை தாண்டியும் அயோத்தி ராமர் கோவிலின் வரவேற்பு மற்றும் சுவாரசியங்கள் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் ஏதாவது செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இலவசமாக முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு 200 முருக பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராமர் கோவிலை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது என திமுகவினர் விமர்சித்தாலும் மக்களின் ஆதரவு பாஜகவிற்கு இருப்பதால்! இதே போன்ற ஆதரவு திமுகவிற்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது திமுக என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.