24 special

ஒரே மாதத்தில் அமைச்சர் சேகர்பாபு அடித்த பல்டி...! அண்ணாமலை அப்பவே சொன்னாரு...!

sekar babu, annamalai
sekar babu, annamalai

கடந்த மாதத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசும்பொழுது சனாதனத்தை எதிர்க்கக்கூடாது, ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசியது சர்ச்சையானது. மேலும் அந்த மாநாட்டில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும் சர்ச்சையானது, இதனை தொடர்ந்து தமிழக பாஜக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்து கொண்டு எப்படி அமைச்சர் சேகர்பாபு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார் என போராட்டத்தை நடத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக வெடித்தது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த விவகாரத்திற்கு எதிராக பேசியதும். அதனை தொடர்ந்து திமுக அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணியிலும் கூட இந்த விவகாரம் திமுகவிற்கு எதிராக திரும்பியதும் மெல்ல இந்த விவகாரத்தில் இருந்து திமுக தனது வீரியத்தை குறைத்துக் கொண்டது. 


இந்த நிலையில் சனாதன விவகாரம் குறித்து பேசி வந்த திமுகவின் அமைச்சர் உதயநிதி சனாதனத்தை பற்றி பிறகு பேசலாம் தற்பொழுது தேர்தல் வருகிறது, தேர்தல் முடிந்த பிறகு பேசலாம் என வேறு நழுவும் விதமாக கூறி சென்று விட்டார். மேலும் நீதிமன்றத்தில் இருந்து வேறு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்து கொண்டு சேகர்பாபு எப்படி சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு வேறு நடந்து வருவது சேகர் பாபு அமைச்சர் பதவியை குறிவைத்து நடந்து வருகிறது என அரசியல் விமர்சனங்கள் எழுந்தது, இந்த நிலையில் அமைச்சர் பதவிக்கு பங்கம் வந்து விடுமோ என கடந்த சில தினங்களாக குறிப்பாக கடந்த ஒரு வாரமாக அமைச்சர் சேகர்பாபுவின் செயல்களில் மாற்றம் தெரிகிறது என சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேகர்பாபு தனது 60 ஆம் கல்யாணத்தை திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்பாள் சன்னதியில் நடத்தினர், அதனை தொடர்ந்து தற்பொழுது சட்டப்பேரவையில் பேசும் பொழுது 'இந்து மதம் எங்களுக்கு எதிரான மதம் அல்ல' எனக்கூறி சரணடையும் விதமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறும் பொழுது 'தமிழ்நாட்டிலே கோவில் ஆக்கிரமிப்பு பற்றி முழு விவரம் தெரியாமல் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றர். இந்த காலகட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு 5,330 கோடி ரூபாய் அளவிற்கு இந்து சமய அறநிலைத்துறை சொத்துக்களை மீட்டிருக்கிறோம் என கூறினார். மேலும் அவர் பேசும்போது 'ஆகவே இந்து மதம் எங்களுக்கு எதிரான மதம் அல்ல, நாங்கள் ஆதரிக்கின்ற மதம்! அரவணைக்கின்ற மதம்! என கூறினார்.ஒரு மாதத்திற்கு முன்பு சனாதன ஒழிப்பு மாநாடு என அதில் கலந்துகொண்டு பேசிவிட்டு எதிர்ப்புகள் வந்தவுடன் தற்பொழுது 'இந்து மதத்திற்கு நாங்கள் எதிரி அல்ல' என மொத்தமாக பல்டி அடிக்கும் விதமாக திமுக பேசுவது அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அண்ணாமலை வேறு கடந்த முறை யாத்திரையில் பேசும்போது கண்டிப்பாக திமுக தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த விவகாரத்தில் இருந்து பல்டி அடிக்கும் என கூறினார். அவர் கூறியதுபோலவே நடந்துவிட்டது எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.