அதிமுக, பாஜகவுடனான கூட்டணி முறித்து கொண்ட நிலையில் இன்று கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் பங்கேற்பதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால அதிமுக தனித்து போட்டியை சந்திக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு ஆரம்பமானது.
இதற்கு இடையில் பாஜகவினருக்கு டேலி தலைமை அதிமுக விலகியது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க கூடாது என்று அறிவித்தது. இதனை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் யூ டியூப் சேனல் பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். இப்படியான சூழலில் டெல்லி சென்ற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் நடைபெறும் சூழல் குறித்த தகவலை பாஜக மேலிடத்தில் தெரிவித்ததும், அவரை பாராட்டினார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று சென்னை கமலாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் பாஜக மையக்குழு கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏக்கள்., மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். கூட்டத்தில், கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது, நாடளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தனியாக எதிர்கொள்வது, தேர்தல் வேலைகளை துரித படுத்துவது, பூத் கமிட்டி குறித்து விவாதிக்கபடவுள்ளது.
அதே நேரத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை மேற்கொளப்படவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இந்த கூட்டத்திற்கு தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் பங்கேற்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுக விலகியதை அடுத்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் எந்த எந்த கட்சியை கூட்டணியில் இணைத்து கொள்ளலாம், தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் முக்கிய ஆலோசனையை மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசிக்கலாம் என்று தெரிகிறது. கூட்டம் முடிந்த பின் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்து தகவல் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிகிறது. அப்படி செய்தியாளர்களை சந்தித்தால் அதிமுக விலகியது குறித்து முக்கிய தகளவால் தெரிவிக்கலாம் என்றும் இதுவரை தமிழ்நாடு பாஜக தலைவரக்ள அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து மௌனம் காத்து வந்த நிலையில் இன்று மௌனம் திறந்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டெல்லி திரும்பிய அண்ணாமலை பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஊடகவியர்களை கூடத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.