சென்னை குஜராத் அணிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு கடந்தும் IPL போட்டி நடைபெற்றது ஒரு புறம் என்றால், தமிழகத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் விடிய விடிய IPL கொண்டாடிய வருமான வருதுறை தரப்பிடம் செந்தில் பாலாஜி தரப்பு யூடர்ன் அடித்த தகவல் கோட்டை வரை புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.
கருர் தொடங்கி தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் டாஸ்மாக் ஒப்பந்த தாரர் ஆகியோர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர், இந்நிலையில் கோவை அருகேயுள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீடு மற்றும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளராக இருந்து வருகிறார். அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக மேயர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இவரது மனைவி கிருபாலினி கார்த்திகேயன், தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், தொழில் நெருக்கடி காரணமாக செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கெம்பனூர் பகுதியில் காயத்ரி என்பவருக்கு சொந்தமான நீலாவதி நினைவு அபாஷா போதை மறுவாழ்வு இல்லம், பந்தயசாலை, பீளமேடு, சேத்துமடை ஆகிய பகுதிகளில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு செய்துள்ளனரா, முறையாக வருமான வரி செலுத்தியுள்ளனரா உள்ளிட்டவை குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் ஐந்தாவது நாளாக நடந்த சோதனை நிறைவடைந்தது. அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இதே போல ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரவிந்தன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்று வந்த சோதனையும் நேற்றிரவுடன் நிறைவடைந்தது.
கோவை மாவட்டத்தில் ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்துள்ளது இதில் 6 இடங்களில் முக்கிய ஆவணங்கள் தொடங்கி பல்வேறு முதலீடுகள் குறித்த தகவல் கிடைத்து இருப்பதாகவும், பலர் வருமான வரிதுறையினரிடம் பணம் வரவு குறித்து சோர்ஸ் முதலான தகவலை கொடுத்து இருப்பதாகவும்...,
இதன் பின் விளைவுகள் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா எவ்வாறு சிக்கினாரோ அதே போன்று செந்தில் பாலாஜியும் வசமாக சிக்குவார் அவரால் திமுக ஆட்சிக்கும் சிக்கல் உண்டாகும் என அடித்து கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.