24 special

செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா...?

Senthil balaji
Senthil balaji

திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி வசமுள்ள துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்ற சம்பவத்திற்கு எதிராக பாஜக, புதிய தமிழகம் மற்றும் அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்தும், ஆளுநர் மாளிகை நோக்கி போராட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.


மேலும் இந்த சட்ட விரோத ஊழல் பணம் முழுவதும் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனிக்கு செல்வதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் தங்களது ரெட்டை நடத்த தொடங்கினர். இந்த வருமானவரித்துறை சோதனையில் செந்தில் பாலாஜி வீட்டைத் தவிர மற்ற இடங்களில் நடத்துவதற்கு ஒரு அதீத ரகசிய தகவல்கள் வருமானவரித் துறையினருக்கு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவருக்கு செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு இருப்பதாகவும் இதற்கு முன்பு நடைபெற்ற பண பரிமாற்று விவகாரத்திலும் அசோக்கின் பெயரை அடிபட்டது என்றும் அதனால் செந்தில் பாலாஜி தன்னுடைய முக்கிய ஆவணங்களை அசோக்கிடம் மறைத்து வைத்திருக்கலாம் என்ற கணிப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் அசோக்கிங் வீட்டில் சோதனைகளை மேற்கொண்டனர் ஆனால் தங்களது பணிகளை செய்யப் போன இடத்தில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிகாரிகளை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி புகார் அளித்ததன் காரணமாக மத்திய அரசு மத்திய பாதுகாப்பு படை பிரிவு அதிகாரிகளை வருமானத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தது. 

சி ஐ எஸ் எப் வீரர்களின் பாதுகாப்பில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ரகசிய குறிப்புகள் அடங்கியுள்ள ரகசிய டைரி ஒன்று வருமானவரித்துறைக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி மூத்த பத்திரிக்கையாளரான  சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார் அதன்படி பல கோடி பண பரிமாற்றங்கள் அடங்கிய ரகசிய டைரி ஒன்று வருமானவரித் துறையினருக்கு சிக்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ரகசிய டைரி வருமானவரித்துறையினர் கையில் மாட்டி விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு அதிகாரிகளை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு எழுந்த சந்தேகத்தின் பெயரில் ரகசிய விசாரணை மேற்கொண்டு பிறகு கிடைத்த ஆடியோ ஆதாரத்தின் மூலம் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வருமானவரித்துறையினர் திமுக ஆதரவாளர்கள் மீது பதிவு செய்துள்ளனர் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் சிக்கிய அந்த ரகசிய டைரியில் யார் யாருக்கெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்து உள்ளார், மேலும் இன்னும் யார் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டியுள்ளது, எங்கிருந்து எவ்வளவு பணம் வர வேண்டி உள்ளது, யார் கணக்கில் எப்பொழுது வரவு வைக்கப்படும், இன்னும் யாரெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் அதன் கணக்குகள் எவ்வளவு மற்றும் மொத்த ஊழல் பற்றிய தகவல்கள் அந்த ரகசிய டைரியில் அடங்கியுள்ளது என கூறப்படுகிறது அதன்படியே வருமானவரித்துறைவினர் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளாக கொங்கு மெஸ் மற்றும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விட்டில் ரெய்டு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரகசிய டைரி வைத்து செந்தில் பாலாஜியின் பதவி மற்றும் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர வருமான வரித்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.