24 special

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் செல்வாக்கு....! தலைமையை கைப்பற்ற போகிறாரா கனிமொழி...?

stalin and kanimozhi
stalin and kanimozhi

திமுகவில் கனிமொழி துணை பொதுச்செயலாளராக இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தூத்துக்குடி எம்பி ஆகவும் இருந்து வருகிறார். ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கனிமொழி சற்று ஒதுக்கப்பட்டவராக இருப்பதாகவும் சில முக்கிய திமுகவின் நிகழ்ச்சிகளுக்கே அவர் அழைக்கப்படுவதில்லை என்றும் பல கருத்துக்கள் அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டது. 


இந்த பேச்சை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகிய இருவர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் அவர்தான் எடுப்பதாகவும் அதிலும் குறிப்பாக முதல்வரின் மகனே தற்போது அனைத்திற்கும் தலைமை தாங்கி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. 

இது போதாது என்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ தொகுப்பிலும் தற்போது கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகளையும் முதல்வரின் மகன் மற்றும் மருமகனே எடுக்கிறார்கள் கட்சியே அவர்கள் தான் அவர்கள் கூறுவது தான் முடிவு என்று பேசியது வேறு கட்சியின் உண்மை நிலவரத்தை வெளிகாட்டியது. 

இவ்வளவு ஏன்! கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டத்திற்கு கூட கனிமொழிக்கு அழைப்பு விடப்படவில்லை எனவும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் கட்டப்பட்ட நூலகத்தின் திறப்பு விழாவிலும் கனிமொழிக்கு அழைப்பிதழ் அவரது வீட்டின் போஸ்ட் பாக்ஸில் வைக்கப்பட்டதாலும் கனிமொழி எம்பி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் மீது அப்சட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் திமுக சார்பில் ஐந்து இடங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் இரண்டாவது கூட்டமாக தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசனை வழங்க ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் பேரையூர் பகுதியில் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றினார் முன்னதாக தங்கம் தென்னரசு ஆர் எஸ் பாரதி என்ஆர் இளங்கோவன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் வாக்குச்சாவடி முகவரி முன்னிலையில் பேசி உள்ளனர். 

இந்த நிலையில் கனிமொழி எம்பி அரங்கத்திற்குள் வரும் பொழுதே திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கனிமொழியை அழைத்து செல்பி எடுத்துக்கொண்டனர். அக்கா ஒரு செல்பி ப்ளீஸ் என்று ஒவ்வொரு திமுக வாக்குச்சாவடி முகவர்களும் கனிமொழி அழைத்து செல்பி கேட்டதற்கு கனிமொழியும் அவர்களுடன் எளிமையாக நின்று செல்பி எடுத்துக் கொண்டார். 

இப்படி சில கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த கனிமொழியை திடீரென்று ஒரு பயிற்சி பாசறை கூட்டத்தில் பார்த்தவுடன் திமுகவை சேர்ந்த கட்சியினர் கொண்டாட்டத்தில் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள போட்டி போட்டதால் தற்போது திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஸ்டாலின் அவர்களின் தலைமையை விட கனிமொழி தலைமைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து கனிமொழியை தலைமையில் ஏற்ற சில திமுகவின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டு வருவதாகவும், இவர்களுடன் சில மாவட்ட செயலாளர்களும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் கனிமொழி தலைமை பொறுப்பிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என கூறியதாகவும் தெரிகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கனிமொழிக்கு திமுகவில் ஆதரவுகள் அதிகரித்து வருவது ஸ்டாலின் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் திமுகவில் கனிமொழி தலைமை வேண்டும் என போர்குரல்கள் எழலாம் என்றும் அது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அதிகமாகி கட்சிக்குள் கலகம் வெடிக்கலாம் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.