24 special

செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதாக நினைத்து ....!வம்பில் மாற்றிவிட்ட மா. சுப்பிரமணியன்...!

M.supramanian,senthilbalaji
M.supramanian,senthilbalaji

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க சென்று தற்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாறி இருக்கிறது,


அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய அறுவை சிகிச்சையை விமர்சனம் செய்பவர்கள் தங்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தான் அதன் வலி தெரியும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியது தான் தற்போது சற்று குறைந்து இருந்த செந்தில் பாலாஜி மீதான கவனத்தை மீண்டும் திருப்பி இருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று  103 இடங்களில் மெகா மருத்துவ சிறப்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பின்னர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கலைஞருக்கும் மருத்துவ துறைக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. 1964-ஆம் ஆண்டு முத்துவேலர் அஞ்சுகம் தாய் சேய் நல விடுதியை தனது சொந்த செலவில் கட்டினார்.

அவருடைய ஆட்சி காலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞர் காப்பீடு திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம் என இந்தியாவிற்கே முன் மாதிரியான பல திட்டங்களை கொண்டு வந்தார். அவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 103 இடங்களில் இன்று தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என பல துறைகளின் சார்பில் மருத்துவம் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கண்ணொளி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற உள்ளது” என்றவரிடம்

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், “செந்தில் பாலாஜி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய அறுவை சிகிச்சையை விமர்சனம் செய்பவர்கள் தங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் வலி தெரியும். செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பேர் முன்னிலையிலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா சுப்பிரமணியனின் இந்த கருத்தை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர், கேட்ட கேள்வி நேரடியாக பதில் கொடுப்பதை காட்டிலும் அமைச்சர் ஆவேசம் அடைவதை பார்த்தால் ஒரு திரைப்படம் ஒன்றில் வடிவேலு ஆட்டை காணோம் என புகார் கொடுக்க வந்த நபரை எப்படி அழைக்கழிப்பரோ அதே மாதிரி அல்லவா அமைச்சட் பதில் இருக்கிறது.

சொல்லவா சொல்லவா என அனைத்தையும் சொல்லி விட்டார் என்பது போல் அமைச்சர் சுப்பிரமணியனின் பதில் இருப்பதாக பலரும் கிண்டல் செய்யும் நிலைக்கு சென்று இருக்கிறது.