24 special

செந்தில் பாலாஜி கோவை பக்கம் தலைகாட்டியிருக்க முடியுமா..? அண்ணாமலையை சிலாகிக்கும் கொங்குமண்டலம்!

Annamalai, senthil balaji
Annamalai, senthil balaji

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாமதமாகவே வாய் திறந்தார் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கார் குண்டுவெடிப்பு தொடர்பாக அவர் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை. உள்துறையை கையில் வைத்திருக்கு  முதலமைச்சரே இதற்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் சம்பந்தமே இல்லாமல் இதுகுறித்து  பேட்டி அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் பதற்சூழ்நிலை இருப்பது போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.


உண்மையில், கோவையில் எந்த பிரச்னையும் இல்லை என்று அவர் சொல்ல முற்படுகிறார். 'கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பான தகவல்களை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்கூட்டியே வெளியிட்டுவெளியிட்டுள்ளார். முதலில் அவரை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார் செந்தில் பாலாஜி.அண்ணாமலை வரை தகவல் சென்று அதை அவர் வெளியிடும் வரை, தமிழக காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது? எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தீவிரவாத கும்பல் நடத்திய சம்பவம் மடைமாற்றப்பட்டு அரசியலாகி இருக்கிறதே? இதனை அரசியலாக்குவது திமுகவா? பாஜகவா? என கோவைபகுதியை அறிந்த நடுநிலையாளர்கள் சிலர் நம்மிடம்,’’விடியலோட தூக்கத்தை கெடுக்குறதே திமுகவினருக்கு வேலையாகிப் போயிற்று போயிற்று. மேலும் விடியலின் தூக்கம் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூலம் மொத்தமாக கெட்டுவிட்டது. பெரிய ஆபத்திலிருந்து அந்த ஈசன் காத்தார்.

வரவிருந்த ஆபத்திலிருந்து இந்த அண்ணாமலை காத்துள்ளார். பேருக்கு எதோ ஒரு பட்டத்தை வாங்கி வண்டியோட்டும் அமைச்சர்களை போல் இல்லாமல், முழு அனுபவ அறிவோடு இயங்கும் அண்ணாமலை ஒருவிதத்தில் நமக்கு கிடைத்த சரியான நபர்.அரசியல் காரணமோ இல்லயோ? ஆனால் அவரது முந்தைய அனுபவத்தின் வெளிப்பாடாக இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்து மேலும் பல உயிர்கள் காக்கப்பட்டன என்பதே உண்மை. 

இந்த விஷயம் சிலிண்டர் விபத்து என்று பூசி மொழுகப்பட்டிருந்தால், அடுத்த பொங்கலுக்கு ஆங்காங்கே சிலிண்டர்கள் வெடித்திருக்கும்.ஆக, மொத்தம் சில முஸ்லீம்கள் பாஜகவை எதிர்ப்பதில் ஆச்சரியமே இல்லை என்பதற்கு இது நல்ல உதாரணம். அரசியல் காரணங்களுக்காக மக்கள் உயிர் பறிக்கும் தீவிரவாத செயல்களை காப்பாற்ற நினைப்பது அல்லது மூடி மறைக்க முயல்வது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். வேறு வழியின்றி திமுக தாமதமாக இதனை ஒப்புக்கொண்டுள்ளது, ஆனாலும், செந்தில் பாலாஜியை வைத்து அவ்வளவு பெரிய யானைக்கும் மீண்டும் வெள்ளையடிக்க நினைப்பது மிகப்பெரிய மடமையே.திமுக மீதான நம்பிக்கையை அந்த கட்சியே கெடுத்துக்கொள்கிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர்கட்சிகளையும், பத்திரிகைகளையும் எதிரிகளாக நினைப்பது தான் பிரச்சனை. தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியிருந்தால் அவர் கோவை பக்கமே தலைகாட்டி இருக்க முடியாது. அந்த வகையில் செந்தில் பாலாஜியையும், திமுக ஆட்சிக்கு பேரிழிவு வராமலும் காத்துள்ளார் அண்ணாமலை. இப்போதும் கோவையில் மாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை குவித்து வைத்துள்ளது ஏன்? ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் பொறுப்போடு பேச வேண்டும்.

அதிமுக ஆட்சி அப்படி ஒன்றும் பெரிய அளவில் நம் தமிழகத்தை முன்னேற்றவில்லை . என்றாலும், இதை போன்ற பிரச்சினைகள் இல்லாமல் சுமூகமாக ஆட்சி நடத்தியது. ஆனால், எப்போதெல்லாம்  திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ரவுடிகள் புகை போல கிளம்பி விடுகிறார்கள். எந்த வித கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு இல்லை. இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு, தொழில் அபகரிப்பு, ரவுடிகளின் அட்டகாசம் இருந்தது.

தற்போது மீண்டும் அது அடுத்த கட்டத்துக்கு  மாறி தற்கொலை படை தாக்குதல் வரை கொண்டு வந்திருக்கிறார்கள். திமுக என்ற கட்சி திருந்தி விட்டது என்று நம்பியோ , அல்லது அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள், பணம் போன்றவற்றிற்கு மயங்கி ஒட்டு போட்டு ஆட்சியை கொடுத்தவர்கலால் வந்த வினை இது’’ என்கிறார்கள் கோவைவாசிகள்.