Cinema

குஸ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி "விளாசிய" நாராயணன் திருப்பதி..!

Kushpu, narayana tirupathi
Kushpu, narayana tirupathi

குஸ்பு உள்ளிட்ட நடிகைகள் சிலரை திமுகவை சேர்ந்த சைதை சாதிக் என்பவன் தரக்குறைவாக பேசிய நிலையில் அது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. குஸ்பு மட்டுமின்றி பல்வேறு பாஜகவை சேர்ந்த திரைதுறையை சார்ந்த நடிகைகள் குறித்தும் அவதூறாக பேசிய நபரை கைது செய்து பெண் வன்கொடுமை சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்து இருக்கிறார் அதில், தி மு கவின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் திருமதி.குஷ்பு மற்றும் பாஜக வை சேர்ந்த திரைப்பட நடிகைகள் குறித்து ஆபாசமாக, தரக்  குறைவாக பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 இது குறித்து குஷ்பு அவர்களின் ட்விட்டர் பதிவிற்கு தி மு கவின் துணைப்பொது செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான திருமதி.கனிமொழி அவர்கள், இதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாகவும், இது போன்ற கருத்தை தங்களின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஏற்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

ஒரு பெண் குறித்து தரக்குறைவாக பேசிய அந்த நபரை இந்நேரம் தமிழக காவல் துறை கைது செய்து சிறையிலடைத்திருக்க வேண்டும். அதை விடுத்து. மன்னிப்பு கேட்பதும், முதல்வர் ஏற்க மாட்டார் என்று சொல்வதும் உதட்டிலிருந்து வரும் வார்த்தைகள் தானேயன்றி மனதிலிருந்து வரும் வார்த்தைகள் அல்ல என்றே கருதப்படும். பெண் வன்கொடுமை சட்டத்தில் அந்த தரம்கெட்ட நபரை கைது செய்து, உரிய தண்டனை பெற்று தர வேண்டிய பொறுப்பும்,கடமையும்  தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உள்ளது.

இனி இதுபோன்ற பேச்சுக்களுக்கு இடம் அளிக்காமல் இருக்க, அந்த நபரை தி மு கவிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டியது   தி மு க வின் துணை பொதுச்செயலாளராக திருமதி.கனிமொழி அவர்களின் கடமை. 

இல்லையேல் அந்த நபரின் பேச்சுகளுக்கு தி மு கவே பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு தி மு க, பெண்களுக்கு எதிரான இயக்கமாகவே மக்களால் கருதப்படும் எனவும் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.