24 special

வருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil balaji,
Senthil balaji,

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் அதனை மாற்றம் செய்ய செந்தில் பாலாஜி டாஸ்மாக் மற்றும் பிற வழிகளை கையாளுவதாகவும், மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மாற்ற படுவதாகவும்,  செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் சென்றது.

இந்த சூழலில் தான் இன்று அதிகாலை முதல் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது,முதற்கட்ட பரிசோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி மீதான இன்றைய வருமான வரித்துறை சோதனைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற அதிக அளவில் மூட்டை மூட்டையாக குவித்து வைத்து இருப்பதாக கிடைத்த தகவல் இரண்டாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு  மது பானங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் சில நேரடியாக பல்வேறு முறைகேடு குற்றசாட்டுகளை டெல்லிக்கு புகாராக அனுப்பி இருக்கிறார்களாம்.

இவற்றின் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திமுகவினருக்கு நெருக்கமான தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ச்சியாக 7 நாட்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது திமுகவில் முக்கிய துறைகளை கையில் வைத்து இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.சில தினங்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் பணிகள் வழங்க லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தி விசாரணை இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டாலோ அல்லது பண பரிவர்த்தனை விவரங்கள் கண்டறியபட்டாலோ செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு மட்டுமல்ல அவரது அரசியல் எதிர் காலத்திற்கே ஆபத்தாக முடியலாம் என்று கூறப்படுகிறது.