24 special

செந்தில் பாலாஜியை குறிவைத்து ஐடி சோதனை ...!சிக்கியது 2000 நோட்டுகள்

Senthil balaji, annamalai
Senthil balaji, annamalai

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மிக பெரிய அளவில் வருமான வருதுறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் தற்போது மிக முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


2 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டது பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்காத நிலையில் பல்வேறு அரசியல் வாதிகளுக்கு தான் இதன் மூலம் சிக்கல் உண்டாகலாம் என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கூறிவந்தனர்.

இது ஒருபுறம் என்றால் கடந்தமுறை 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட போது பணத்தை வங்கிகளில் மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டது, ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை இந்த நிலையில் இதன் பின்னணி என்னவாக இருக்கும் என அரசியல்வாதிகள் தலையை பிய்த்து கொண்டு இருந்த வேலையில் முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புழக்கத்தில் இல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளியில் கொண்டுவரவும் அதையொட்டி நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்டறியவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இது போன்ற செயலில் இறங்கி இருக்கலாம் என்று ஒரு சில பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சுமார் 900 க்கு மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் தான் இது போன்று மிக பெரிய சோதனைகள் அரங்கேரும் அப்படி இருக்கையில் செந்தில் பாலாஜியின் இடங்களை குறிவைத்து ஐ டி சோதனை நடைபெற 2 ஆயிரம் நோட்டுக்கள் பரிவர்த்தனையில் பல ஆவணங்கள், நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்து இருப்பதாக கூறுகின்றனர்.

மிக பெரிய தொழில் நிறுவனங்கள் அரசியலில் காலம் காலமாக முதல்வர் நாற்காலியை பிடித்து வருபவர்கள் ஆகியோர் இல்லங்களில் தான் மிக பெரிய அளவில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது வழக்கம் அப்படி இருக்கையில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை திமுகவினரையே அதிர செய்து இருக்கிறது.

சில நாட்கள் முன்புதான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்காணிக்க வேண்டும் எனவும்,  டாஸ்மாக் மூலம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயற்சி செய்வார்கள் அதனை கண்காணிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.