தமிழக அரசியலில் கடந்த வாரம் பரபரப்பை உண்டாக்கிய சம்பவங்களில் ஒன்றாக அமைந்தது செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு. முதலில் ஊடகங்களில் விவாத பொருளாக இருந்த செந்தில் பாலாஜி மீதான செய்தி பின்பு அமைதி நிலைக்கு சென்றது.
இந்த நிலையில் பத்திரிகையாளர் மணி நேர்காணலில் தெரிவித்த கருத்து, உண்மையில் ஆளும் கட்சியான திமுக மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
இப்படி ஒரு விசித்திர வழக்கை எங்காவது பார்த்து இருக்கிறோமா? ஒருவர் தான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னால் அவரை விட்டு விட முடியுமா? இப்படி ஒரு தீர்ப்பு எப்படி வந்தது. தான் வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படி என்றால் எதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு சட்டம் என கேட்டு இருந்தார்.
மேலும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் சேர்த்ததே முதல்வர் ஸ்டாலின் செய்த பெரும் தவறு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என எப்படி மிதப்பில் திமுகவினர் இருக்கலாம், தமிழ்நாட்டில் நிலை என்ன என மக்களுக்கு தெரியாதா? இங்கு என்ன பாலாறும் தேனாரும் ஓடுகிறதா என மணி எழுப்பிய கேள்வி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.ஒரு புதிய தலைவன் "உருவாவான்" குறித்து வைத்து கொள்ளுங்கள் என அழுத்தம் திருத்தமாக மணி குறிப்பிட்டு இருந்தார்.
வழக்கமாக மணி திமுகவிற்கு தனது பேட்டிகள் மூலம் தவறுகளை சுட்டி காட்டுவார், ஆனால் எங்குமே திமுக ஆட்சிக்கு வர கூடாது என்றோ பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றோ எப்போதும் சொன்னது இல்லை. அப்படி பட்ட பத்திரிகையாளர் மணியே, திமுகவினர் இதே போன்று பேசினால் புதிய தலைவர்கள் உருவாவார்கள் என்று கூறியது ஆளும் கட்சியான திமுகவை அதிர செய்துள்ளது.