24 special

அடுத்த சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி..!ஆப்பாக முடிந்த விவாதம்

Senthil balaji, power cut
Senthil balaji, power cut

ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் அதிகம் வாங்கும் விவகாரத்தில் பத்திரிகையாளர்களிடம் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது அதேபோன்று மின்வெட்டு தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் வாயை விட்டு வம்படியாக அடுத்த சர்ச்சைக்கு தயாராகி விட்டார். 


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் 'டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள்! இதை நீங்கள் ஏன் தடுக்க கூடாது' என கேட்ட பொழுது பதிலுக்கு உடனே பத்திரிகையாளரிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி சற்று ஆவேசமாகவே 'எந்த கடையில் வாங்குகிறார்கள்? நீங்கள் சென்று பார்த்தீர்களா? உங்களுக்கு தெரியுமா' என கேட்டார்.

உடனே அதற்கு பத்திரிக்கையாளர் ஆமாம் நான் சென்று பார்த்தேன், நான் கூட வாங்கும் பொழுது என்னிடம் கூட 10 ரூபாய் அதிகம் வாங்கினார்கள் என பத்திரிகையாளர் பதிலளிக்க உடனே அமைச்சர் செந்தில்பாலாஜி 'எல்லா கடைக்கும் சென்று பார்த்து விட்டீர்களா? 5000 கிடைக்கும் சென்று பார்த்து விட்டீர்களா? என பத்திரிகையாளரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்த வீடியோ இணையங்களில் தொடர்ந்து வைரலானதை தொடர்ந்து மது பிரியர்கள் ஆவேசமாகினர், தமிழகத்தில் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் இருந்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கும் வீடியோ இணையங்களில் தொடர்ந்து வெளியானது. இந்த வீடியோக்கள் வெளியான அடுத்த சில நாட்களிலேயே வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான வீடுகளை முற்றுகையிட்டு கிட்டத்தட்ட எட்டு நாட்கள் ரெய்டு நடத்தினர். இந்த விவகாரத்தின் பரபரப்புகள் சற்று ஓய்ந்துள்ள நிலையில் தற்பொழுது மீண்டும் செந்தில் பாலாஜி மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பில் மின்தடை குறித்த கேள்விக்கு ஆவேசமாகி சிக்கி உள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல், இரவு என நேரம் பாராமல் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் மின்தடையால் மக்கள் அவதிப்பட்டு பல்வேறு இடங்களில் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வளவு ஏன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும்பொழுது கூட சென்னையில் மின்தடை ஏற்பட்டது, இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட பேசும்போது, 'இருளில் இருக்கும் தமிழகத்தை காப்பாற்ற பாஜகவால் முடியும்' என கூறிவிட்டு சென்றார். 

இப்படி தமிழகத்தில் மின்தடை இருப்பதாய் மத்திய உள்துறை அமைச்சரே தெரிவிக்கும் அளவிற்கு இருந்து வரும் நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இது குறித்து கேள்விகள் வைக்கப்பட்ட பொழுது எங்கே மின்தடை இருக்கிறது? நீங்கள் சென்று பார்த்தீர்களா? பத்திரிகைகள் எதாவது எழுதுகின்றன என நீங்கள் என்னிடம் வந்து கேட்காதீர்கள் உங்கள் வீட்டில் மின்தடை இருக்கிறதா? எங்கே மின்தடை இருக்கிறது நானும் மின்வாரிய அதிகாரியுடன் சென்று பார்த்தேன் எங்குமே மின்தடை இல்லை சென்னையில் ஏற்பட்டது அது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்று கூறி சமாளித்தார்.

ஏற்கனவே இதுபோன்றுதான் பத்திரிகையாளர் சந்திப்பில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குகிறார்கள் என்று கேட்ட பொழுது ஆவேசமாக அவர்களுடன் செந்தில் பாலாஜி வாதம் செய்ய அது அவருக்கே ஆப்பாக முடிந்தது. அதேபோல் இப்பொழுது மின்தடை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் வாதாடிய செந்தில் பாலாஜி வீடியோ தற்பொழுது இணையங்களில் வைரலாகிறது. வரும் காலங்களில் இதனால் எந்த மாதிரியான விளைவுகள் நடக்குமோ? எதை சந்திக்கப் போகின்றாரோ? என இப்பொழுது பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.