விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இரு தினங்கள் முன்னர் பேசிய பேச்சுக்கள் தமிழக மக்கள் இடையே அதிர்வலைகளை உண்டாக்கியது. குறிப்பாக வட தமிழகத்தை சேர்ந்த மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில் இரு தரப்பினர் இடையே கோவிலில் தரிசனம் செய்வது உள்ளிட்ட பிரச்சனையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வரும் வேலையில் திருமாவளவன் கோவிலில் பூட்டு போட்டதை கிண்டல் செய்யும் விதமாக பேசி இருந்தார்.
கோவிலில் பூட்டு போட்டு விட்டார்கள் இப்போ உனக்கு சந்தோசமா? மூளை இருந்தால் இப்படி செய்வியா? என பேசியவர் தனது பேச்சின் ஒரு பகுதியாக இது உன் சாதி புத்தி என பேசினார். திருமாவளவனின் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை வட தமிழகத்தில் உண்டாக்கியது.
உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, திருமாவளவனின் அநாகரிக பேச்சு கண்டிக்க தக்கது மட்டுமல்ல அருவருக்க தக்கது, தனிப்பட்ட நபர்களை குறித்து பேசாமல் நேரடியாக பொதுபடையாக திருமாவளவன் சாதி புத்தி என பேசியது மிக பெரிய தவறு. நான் அதே போல் திருமாவளவனின் சாதி புத்தி என சொன்னால் சரியாக இருக்குமா என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதோடு நில்லாமல் ராகுல் காந்தி குஜராத்தில் ஒரு சமூகம் குறித்து பேசிய காரணமாக அவரது எம் பி பதவியை இழந்து இருக்கிறார், அதே போன்ற நிலை திருமாவளவனுக்கும் வரும் என அடித்து கூறினார் வழக்கறிஞர் பாலு.
இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சிருக்கு ஆளும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களே தங்களது கண்டனத்தை தலைமையிடம் பதிவு செய்து வந்தனர், இன்னும் சொல்ல போனால் வட மாவட்டத்தை சேர்ந்த மிக மூத்த அமைச்சர் முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்டு என்ன இப்படி பேசிக்கொண்டு திருமாவளவன் இருந்தால் 2024 தேர்தலில் வட மாவட்டங்களில் வெற்றி என்பது கேள்வி குறியாகும் என தெரிவித்து இருக்கிறாராம்.
இந்த நிலையில் திடீர் பொது கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவன், அப்படியே பல்டி அடிக்கும் விதமாக தனது கருத்தை திரும்ப பெற்று இருக்கிறார் அதில், விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராம கோயில் விவகாரத்தில், வன்னியர் சமூகத்தை விமர்சிக்கவில்லை எனவும், பாமகவின் அரசியலை மட்டுமே விமர்சித்ததாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
திருமாவளவன் பல்டி அடிக்க ஒன்று அவரது பதவி ராகுல் காந்தி போல காலியாகும் என பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு எச்சரிக்கை விடுத்தது ஒரு காரணம் என்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என முதல்வருக்கு அழுத்தம் கொடுத்ததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.எது எப்படியோ திருமாவளவன் பாமகவை விமர்சனம் செய்யாமல் உன் சாதி புத்தி என பொதுப்படையாக பேசியது தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.