கரூரில் நடைபெற்ற சம்பவங்கள் தற்போது திமுக ஆட்சிக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு தாக்குதலில் ஈடுபட முயன்றதும், வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்க முயன்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நேரடியாக டெல்லிக்கு தகவல் கொடுத்து இருக்கிறார், தமிழக காவல்துறை அதிகாரிகள் அரசியல் வாதிகளுக்கு பயந்து கொண்டு பாதுகாப்பு அளிக்க மறுத்து விட்டதாக அவர் தெரிவித்த தகவல் திமுக ஆட்சிக்கு ஆபத்தை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராமகிருஷ்ண புரத்தில் அமைந்துள்ள சகோதரர் அசோக் வீட்டில் சென்னை வருமானவரித்துறையினர் ஆணையர் கிருஷ்ண பிரசாத் தலைமையில் 10 பேர் கொண்ட குழு காலையில் வருமான வரி சோதனைக்காக வீட்டிற்கு வந்துள்ளனர் ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டுள்ள நிலையில் தகவல் இருந்து வந்து திமுக தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் வீட்டிற்கு முன் குளிர்ந்துள்ளனர்.
அப்பொழுது அங்கிருந்த வருமானவரித்துறை அலுவலர் கையில் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைய முற்பட்டுள்ளார் அதனை தடுக்க திமுக தொண்டர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை உள்ளே சென்று விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதன் பின்னர் வருமான வரித்துறை அலுவலரின் வந்த காரை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர் இதனை எடுத்து கரூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகளை கார்கள் ஏற்றி அப்பகுதியில் இருந்து மீட்டு சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உண்டாகி இருப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு இருப்பது தெளிவாக தெரிய தொடங்கி இருப்பதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர் அடுகடுக்காக செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சட்டத்தை மீறி செயல்படுவது திமுக ஆட்சிக்கு பெரும் சிக்கலை உண்டாகி இருக்கிறதாம்.
பெண் வருமான வரித்துறை அதிகாரி கொடுக்கும் புகாரின் அடிப்படையில் இனி வரும் நாட்களில் பெரும் சிக்கல் செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல முறையாக பாதுகாப்பு வழங்காத தமிழக அரசு அதிகாரிகளுக்கும் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது.