
ஒன்றல்ல இரண்டல்ல தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 44 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்க துறை சோதனை நடத்தி வருவது கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில் யாரும் எதிர் பாரத விதமாக முக்கிய நபர் வீட்டிற்குள் அமலாக்க துறை நுழைந்து இருக்கும் சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிப்பவர் சண்முகம் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி செய்து வருகிறார் இவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
மூன்று வாகனங்களில் ஐந்திர்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் 10 -ற்குமேற்பட்ட மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தான் தற்போது தகவல் ஒன்று பேசு பொருளாக மாறி இருக்கிறது.
வழக்கமாக அமலாக்க துறை சோதனை என்றால் சம்மந்தப்பட்ட பெரு முதலாளிகள் வீடுகளில் சோதனை செய்வது வழக்கம், ஆனால் என்னடா டேட்டா என்ட்ரி தொழில் செய்யும் நபரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறதே என ஆச்சர்யமாக கரூர் மக்கள் பார்த்த நிலையில் அங்கு தான் முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அரசு ஒப்பந்தங்கள் தொடங்கி வெளி நாட்டில் இருந்து பண பரிமாற்றம் என ஏதோ ஒரு டேட்டா என்ட்ரி தொழில் செய்யும் நபர் உதவி வருவதாக தகவல்கள் பல நாட்களாக அமலாக்க துறைக்கு கிடைத்து வந்ததாம்.
அதன் அடிப்படையில் இன்று யார் அந்த நபர் என்பதை கண்டறிந்த அமலாக்காதுறை அதிகாரிகள் சண்முகம் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்களாம். இவர் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்க பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை செந்தில் பாலாஜியின் நண்பரின் நெடுஞ்சாலை தொடர்பான ஒப்பந்ததிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசிற்கு கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில் சண்முகம் எனும் நபர் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கி இருப்பதால் முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டு விட்டார் என்றும் விரைவில் பல்வேறு தகவல்கள் ஆதர பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சண்முகம் வீட்டிற்கு அமலாக்க துறை அதிகாரிகள் வருவதற்கு முன்னரே நேரடியாக மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்த சம்பவம் உண்மையில் கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறதாம்.