இன்று கரூரில் நடைபெற்ற சம்பவம் ஒட்டு மொத்த தமிழக தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, பல ஆண்டுகளாக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட திமுகவினர் கூட கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து சற்று பதற்றதுடனே எதிர்கொள்கின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை குறித்த தகவல் முதலில் முதல்வர் கவனத்திற்கு சென்ற நிலையில் வழக்கமான சோதனை என நினைத்து கடந்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு மாநில உளவுத்துறை அதிகாரிகள் கரூர் மேயர் முதற்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் இது சட்ட ரீதியாக மிக பெரிய பின்விளைவுகளை உண்டாக்கும் என தெரிவிக்க, அடுத்த நிமிடம் திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொண்டு சில விஷயங்களை பேசி இருக்கிறார் ஸ்டாலின்.
இன்று திமுகவை சேர்ந்த ஆர் எஸ் பாரதி, செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகளை தொந்தரவு செய்யாதீர்கள் சட்ட ரீதியாக மிக பெரிய பிரச்சனையை நீங்கள் மட்டுமல்ல மாவட்ட கண்காணிப்பாளர் தொடங்கி அனைவரும் எதிர்கொள்ள வேண்டும்.
முதல்வர் கடும் அதிருப்தி அடைந்து இருக்கிறார் என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது இதையடுத்தே செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீட்டில் கூடி இருந்த நபர்கள் ஓட்டம் எடுத்து இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் கரூர் பெண் மேயர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி தம்பி வீட்டிற்கு முன்பு கூடியதாக செய்தி வெளியான நிலையில் அவர் மீது கடும் அதிர்ச்சியில் இருக்கிறதாம் திமுக மேலிட தலைமை.
இதுவரை முதல்வர் மகள் வீட்டில் சோதனை நடைபெற்ற போது கூட திமுகவில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது கிடையாது திமுகவில் காலம் காலமாக இருக்கும் தலைவர்கள் கூட இப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழும் வகையில் நடந்து கொண்டது கிடையாது அப்படி இருக்கையில் இன்று, ஊடகங்களில் வருமான வரித்துறை சோதனை என மட்டும் வந்து இருக்க வேண்டிய செய்தியை, செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய காரணமாக நாடு முழுவதும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த செய்தியாக மாறி இருக்கிறது.
இது முதல்வர் ஸ்டாலினை கடும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறதாம். முதல்வர் செந்தில் பாலாஜிக்கு பிடிமானம் கொடுக்காத நிலையில் என்ன செய்வது என முழித்து வருகிறாராம் செந்தில் பாலாஜி.