தற்போது இருக்கும் காலகட்டங்களில் ஒருவர் கையில் செல்போன் இருந்தாலே யூட்யூபில் சேனல் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் போஸ்ட் பண்ணி பிரபலம் ஆகி விடுகின்றனர். எந்த அளவுக்கு என்றால் சினிமா நடிகை நடிகர்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்புகளும், ஃபேன் பாலோவர்சும் இந்த youtube பிரபலங்களுக்கும் நடக்கிறது. Youtube பிரபலங்களின் டாப் 10 லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர் தான் இர்பான்.
இவர் தனது youtube சேனலில் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று அங்கு பல்வேறு வகையான உணவுகளை உண்டு அதை தனது சேனலில் போஸ்ட் செய்து வந்து கொண்டிருந்தார். பிறகு செலிப்ரிட்டி உடன் ஃபுட் சேலஞ்ச் மேற்கொண்டு அதையும் தனது youtube சேனலில் பதிவிட்டு கொண்டிருந்தார் இதனால் இவரை 35 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த இர்ஃபான் youtube சேனலில் முதன்முறையாக திருமணம் வீடியோக்கள் போஸ்ட்டும் வந்தது. அந்த திருமணம் வேறு யாரு திருமணம் கிடையாது இர்பானின் திருமணம் தான்.
கடந்த மே 14ஆம் தேதி இவரது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் அரசியல் முக்கிய தலைவர்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமணத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு காண்போர் அனைவரையும் கவர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் அவருடைய சமூகத்தில் இதற்கு பலத்தை எதிர்ப்பு தோன்றியது. நமது சமூகத்தில் இந்த மாதிரி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று அதனை வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது ஏற்புடையதல்ல என்று விமர்சனங்களை சந்தித்து கொண்டிருந்தார். இதனால் திருமணத்தின் சந்தோஷத்தை விட சுற்றி இவரது சமூகத்திலிருந்தே எழுந்த விமர்சனங்கள் இவரை மன வெறுத்து போகும் அளவிற்கு தள்ளியது.
இர்பான் இப்படி சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஆளுநர் அவரையும் அவர் குடும்பத்தினரை அழைத்து தனது மாளிகையில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதாவது திருமணத்திற்கு ஆளுநரையும் இர்பான் அழைத்திருந்திருக்கிறார் ஆளுநர் தனது வேலை காரணமாக வர முடியாத காரணத்தினால் திருமணம் முடிந்த கையோடு மரியாதையுடன் விருந்திற்கு அழைத்திருக்கிறார். ஆளுநரும் இர்பானின் ரசிகராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இர்பான் இருந்த சோகத்தில் இருந்து மீண்டு வர ஆளுநரின் விருந்து இனிதாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இர்பான் தற்போது அவரது சமுதாயத்தினரின் ஏச்சு பேச்சுக்கள் போன்றவற்றில் இருந்து வெளிவந்து, இவர்கள் இப்படித்தான் திருந்தவே மாட்டார்கள் என்று தனது பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார்.
அதாவது தனது சொந்த வீடியோக்களிலே தனது சொந்த சமூகத்தினரை கலாய்க்கும் அளவிற்கு இர்பான் மாறிவிட்டார். 'ஹே நாங்கள் படத்துக்கு போயிட்டு இருக்கோம் ஆமாம் நாங்கள் முஸ்லிம் தான் ஆனால் படத்துக்கு போயிட்டு இருக்கோம். ஏனென்றால் என்ன சொன்னாலும் துன்புறுத்துவதற்கு இன்டர்நெட்டில் ஆட்கள் உள்ளனர். எதை சொன்னாலும்! உதாரணத்திற்கு ஒரு கேக் சாப்பிடுகிறோம் என்று கூறினால், எதற்கு அந்த கேக்கை சாப்பிடுகிறீர்கள்?அது நல்லதல்ல என்று கூறும் அளவிற்கு ஆட்கள் இன்டர்நெட்டில் உள்ளனர். ஏன்டா கேக்குதானடா சாப்பிடுரா.." என்று இர்பான் தனது மனைவியுடன் நகைப்புடன் ஒரு வீடியோவை பதிவிட்டு தனது சொந்த சமூகத்தினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இர்பானின் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. தனது சொந்த சமூகத்திலிருந்து திருமணத்திற்கு அன்பான வாழ்த்துக்களை தவிர கடிந்து கொள்ளும் வாழ்த்துக்களை கொடுத்ததற்கு இர்பான் இந்த முடிவு எடுத்து,விமர்சனங்களை வைத்த சமூகத்தினருக்கு தனது மனைவியுடன் சிரிப்பில் பதிலளித்துள்ளார்.