24 special

வருமான வரித்துறை போட்ட ஸ்கெட்ச்சில் வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி

Kanimozhi,a rasa, senthil balaji
Kanimozhi,a rasa, senthil balaji

தமிழகம் பக்கம் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தனது பார்வையை திருப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை முதலே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கிட்டத்தட்ட 200 இடங்கள் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் கடந்த வாரத்தில் திமுகவிற்கு நெருக்கமான இடங்கள் என கருதப்படும் அண்ணா நகர் எம் எல் ஏ மோகன் வீடு மற்றும் சபரீசன் நெருக்கமான இடங்கள் ஆகியவற்றில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு இறங்கியதும் குறிப்பிடத்தக்கது. 


கடந்த வாரத்தில் நடந்த ரெய்டுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட ரெய்டு என்பது தனிப்பட்ட விவகாரம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஏற்கனவே 2 ஜி விவகாரத்தில் நடந்த வழக்குகள் போல் கிட்டத்தட்ட 2ஜி விவகாரத்திற்கு இணையாக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.  2ஜி விவகாரத்தில் பல ஆயிரக்கணக்கில் கோடிகள் புழங்கியது போல் டாஸ்மாக்கிலும் தற்பொழுது பல ஆயிரக்கணக்கில் கோடிகள் புழங்கி வருவதாகவும் அவை அனைத்தும் முறையாக கணக்கில் வரவில்லை எனவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் உலா வந்தன. 

மேலும் முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூட அரசுக்கு கணக்கில் வருவது 45,000 கோடி ரூபாய் தான் ஆனால் அரசருக்கு கணக்கில் வராமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் தமிழ்நாட்டில் விற்பனையாகிறது. இது அனைத்தும் கணக்கில் வந்தால் அது அரசுக்கு வருவாயாக அமையும் எனவும் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை வருமானவரித்துறையினர்  இன்று, நேற்று கண்காணிக்கவில்லை எனவும் அவர் எப்பொழுது மதுவிலக்கு ஆயத்துறை தீர்வு அமைச்சராக பதவி ஏற்றாரா அப்பொழுது முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறார் எனவும் டாஸ்மாக்கில் நடக்கும் விற்பனைகள், டாஸ்மாக்கில் நடக்கும் ஏலம், டாஸ்மாக்கில் வழங்கப்படும் பார் உரிமம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து காத்திருந்து தற்பொழுது குறி வைத்து வருமானவரித்துறை பிடித்துள்ளதால் செந்தில் பாலாஜி நகர முடியாமல் இருப்பதாக தெரிகிறது. 

ஏற்கனவே ஆ ராசா, மற்றும் கனிமொழி ஆகியோர் 2ஜி விவகாரத்தில் எப்படி சிக்கி சிறைக்கு சென்று வந்தார்களோ அதே போல் செந்தில் பாலாஜி இந்த முறை சிக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் தற்பொழுது முதல்வர் ஊரில் இல்லாத சமயமாக யாரும் ரெய்டில் இறங்குவதற்கு வாய்ப்பில்லை என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது ரெய்டில் இறங்கியது வருமானவரித்துறை போட்ட ஸ்கெட்ச் தான் என தெரிகிறது. 

இது மட்டுமல்லாமல் வரும் காலங்களில் அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருப்பதால் இந்த இரு துறைகளில் இருந்து தப்பித்தாலும் சிபிஐ வசம் கண்டிப்பாக சிக்குவார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே திமுகவில் ஆ ராசா மற்றும் கனிமொழி வரிசையில் தற்ழுது செந்தில் பாலாஜி இணைந்துள்ளார்.