தமிழகத்தில் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்றுவரும் வருமான வரித்துறை சோதனையில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பெரும் பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது, ரைடு நடைபெறும் இடத்தில் பெண் வருமான வரித்துறை அதிகாரியை திமுக மேயர் தொடங்கி பல்வேறு திமுகவினர் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இந்த சூழலில் கரூரில் 10 இடங்களில் நடைபெற இருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை 3 இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டனர். திரைப்படங்களில் மட்டுமே அரசு அதிகாரிகள் குறிப்பாக சோதனைக்கு வரும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறுவது போன்ற காட்சிகள் இடம்பெறும்.
இந்த சூழலில் தமிழகத்தில் ஊடகங்கள் கூடி இருக்கும் நேரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெண் மேயர்கள் தொடங்கி ஆளும் கட்சியான திமுகவினர் அராஜக செயலில் ஈடுபட்ட சம்பவம் ஒருபுறம் பதற்றத்தை உண்டாக்க. மிக பெரிய பின்விளைவுகளை தமிழக டிஜிபி சந்தித்து இருக்கிறார்.
வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்க நேரடியாக உள்துறை செயலாளர் மாவட்ட sp முதற்கொண்டு தொடர்பு கொண்டு டோஸ் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சோதனைக்கு வந்த அரசு அதிகாரிகளை குண்டர்கள் தாக்கிய சம்பவம் குறித்து தமிழக டிஜிபியிடம் அறிக்கை கேட்க இருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம், இந்த சூழலில் உள்துறை செயலாளர் அமுதா IAS மூலம் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு போட்டு இருக்கிறதாம்.
செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் செய்த சம்பவம் வரலாற்று பிழை என மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் மகள் குடும்பம் தொடங்கி எத்தனையோ இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்து இருக்கிறது அக்கெல்லாம் இப்படி ஒரு அராஜகம் நடைபெற்றது இல்லை.
செந்தில் பாலாஜி வருமான வரித்துறை சோதனை வழக்கில் நிச்சயம் மிக பெரிய பின் விளைவுகளை சந்திப்பார் செந்தில் பாலாஜி மட்டுமல்லாமல் காவல்துறை அதிகாரிகளும் சிக்குவார்கள் என அடித்து கூறுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு உத்தரவு வந்து இருக்கிறதாம், நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் கேள்வி குறியாக மாறும் என்பதால் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தமிழக காவல்துறை இருக்கிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி சென்று இருந்தால் கூட செந்திபாலாஜிக்கு உடனடியாக சிக்கல் வருமா என தெரியவில்லை, எங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கைவைத்தார்களோ அப்போதே பதவி காலி என அடித்து கூறுகின்றனர் சட்ட நிபுணர்கள்.வலையில் சிக்கிய எலியை போல செந்தில் பாலாஜியை சிக்க வைத்து இருக்கிறார்கள் கரூர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்.