24 special

தனக்கு தானே ஆப்பாக திருப்பிய செந்தில் பாலாஜியின் செயல்

Mk stalin,senthilbalaji
Mk stalin,senthilbalaji

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் செய்த செயல் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது... வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.


திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த வாசல் கதவை திறக்காத நிலையில் சுவற்றில் ஏறி சோதனை செய்ய வருமான வரி துறையினர் உள்ளே  செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோ காட்சிகள்பெரும் பின்விளைவுகளை உண்டாக்கி இருக்கிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட தகவல் உடனடியாக முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் செல்ல அவர் ஆர் எஸ் பாரதியை தொடர்பு கொண்டு ஆவேசமாக பேசி இருக்கிறாராம் மேலும் ஆர் எஸ் பாரதி செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு யாரும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு இடையூரு பண்ண கூடாது என கூறி இருக்கிறார்.

இதை செய்தியாளர் சந்திப்பிலும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து இருக்கிறார். இது நடந்து முடிந்த அடுத்த நிமிடமே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி விரும்ப தகாத சம்பவம் நடந்து விட்டது, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறேன்.

என்னுடன் தொடர்புடைய 40 இடங்களில் கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார், சார் உங்கள் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி இருக்கிறார்கள் என கேட்க அதற்கு செந்தில் பாலாஜி எங்கள் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி... அனைத்திற்கும் பதில் சொல்லி விட்டார் என செந்தில் பாலாஜி மலுப்பலாக பதில் சொன்னார்.

எப்போதும் நேரடியாக செய்தியாளர் கேள்விக்கு பதில் சொல்லும் செந்தில் பாலாஜி இந்த முறை எங்கள் அமைப்பு செயலாளர் பதில் சொல்லுவார் என பல்டி அடித்ததும் வழக்கத்திற்கு மாறாக முகத்த்தில் சோகத்துடன் காணப்பட்ட சம்பவமும் என்னென்ன பின் விளைவுகள் இனி வரும் என்பதை செந்தில் பாலாஜிக்கு உணர்த்தி இருக்கிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான  தாக்குதலில் உடந்தையாக இருந்ததாக கரூர் மேயர் பதவியும் பறிபோகலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிபாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர் வருமான வரித்துறை சட்டம் தெரிந்தவர்கள்.