அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை என சோதனை நடந்து வரும் சமயத்தில் செந்தில் பாலாஜியின் ஆட்களின் அத்துமீறல் அதிகமாகிவிட்டது என தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் அமைச்சர்களின் முக்கியமான அமைச்சராக வலம் வருபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை தீர்வு அமைச்சராக இருந்து வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மதுபான பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கோபப்பட்டதும் அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக்குகளில் இருந்து சில டாஸ்மாக்குகளில் மது பிரியர்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்குகிறார்கள் என வீடியோ எடுத்து பரவியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சரவை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் அதிக குற்றச்சாட்டுகள் செந்தில் பாலாஜியின் பக்கம் வந்ததாகவே தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் தமிழகம் முழுவதும் அதிரடி இடங்களில் ரெய்டு நடத்தினர் அதனை தொடர்ந்து தற்பொழுது இன்று அதிகாலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிகாரிகள் ரெய்டுக்கு சென்ற பொழுது அங்கு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் செந்தில் பாலாஜி ஆட்கள் தடுத்துள்ளனர். மேலும் பெண் அதிகாரிகளை பணி செய்யவே விட கூடாது என்கின்ற ரீதியில் அங்கு சென்று அவர்களை மடக்கியதும் பரபரப்பாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனைகளை சென்றபோது அங்கு உள்ள பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் சோதனை செய்ய வந்த அதிகாரியின் காரை அடித்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உடைத்ததும் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யவிடாமல் இப்படி செந்தில் பாலாஜியின் ஆட்கள் தடுத்து நிறுத்துவதால் இது செந்தில் பாலாஜிக்கு வினையாக முடியும் எனவும் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் தற்போதைய நிலவரப்படி அங்கு செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மொபைல் கேமராவை எடுத்தாலே துரத்தி அடிப்பதும், செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் அடித்து விரட்டுவதும், அங்கு சுற்றளவிற்குள் யாரும் இருக்கக்கூடாது அதிகாரிகள் தவிர யாரும் இருக்கக் கூடாது என விரட்டுவதுமாக பரபரப்பாக இருந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டும் அல்லாமல் செந்தில் பாலாஜி தற்பொழுது இந்த ரெய்டு விவகாரங்களில் இப்படி அத்துமீறலில் ஈடுபடுவதால் திமுக அமைச்சரவைக்கு இது மேலும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் என தெரிகிறது. ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியான காரணத்திற்காகவே பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டது திமுக அமைச்சரவையில் நினைவில் இருக்கலாம் இந்த நிலையில் தற்பொழுது வருமானவரித்துறை அதிகாரிகளை அடிப்பதும், அவர்களை கடமையை செய்யவிடாமல் தடுப்பதும் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சனகள் கூறி வருகின்றனர்.
இப்படியெல்லாம் செய்யும் காரணத்தினால் இது முதல்வருக்கு கோபத்தையே ஏற்படுத்தும் எனவும் தெரிகிறது இப்படியெல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடந்து கொள்வதால் இது செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல திமுகவிற்கும் எதிர்வினையாக இருக்கும் என்று தெரிகிறது. செந்தில் பாலாஜி அவருக்கு மட்டும் அல்ல திமுகவிற்கும் வினையை தேடி தருகிறார்கள் என திமுகவின் மூத்த தலைவர்களை தற்போது சிலரிடம் பேசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.