24 special

படுத்த படுக்கையில் செந்தில் பாலாஜி... கசிந்த புழல் சீக்கிரட்ஸ்....

SENTHILBALAJI
SENTHILBALAJI

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயிரத்தர்வைத்துறையில் அமைச்சராக இருந்து அப்போது அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் ஆல்கஹாலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்பட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டை எழுந்து வந்தது. இந்த நிலையில் இது குறித்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது தொடர்ந்து ஏற்கனவே அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வந்த சமயத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக மக்களை ஏமாற்றி பணம் வாங்கிவிட்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது தெரிய வந்தது.


இந்த நிலையில் நீ செந்தில் பாலாஜி மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த சமயத்தில் இவரை வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து இவர் மீது தற்போது வரை விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடத்தப்படும் சமயத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வாங்குவதற்காக எல்லா நீதிமன்றங்களிலும் தொடர்ச்சியாக முயற்சி செய்து எந்த ஒரு நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால் காவல் விசாரணை மட்டும் 10 நாட்கள் 20 நாட்கள் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை செந்தில் பாலாஜி 10 முறைக்கு மேல் ஜாமீன் தாக்கல் செய்து அவை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது. 

இந்த நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருட காலம் காலநிலையில் அமலாக்கத் துறையின் வழக்கிற்கு எதிராக ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி தற்போது இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் செந்தில் பாலாஜி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், மிகவும் உடல் மெலிந்த நிலையில் உள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. இந்த நிலையில் தற்பொழுது செந்தில் பாலாஜி படுத்த படுக்கையாக சென்னை புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் வருத்தப்படுக்கையாக இருந்த நிலையில் நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜராகி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு நீதிமன்ற காவல் முடிவடைந்த பிறகு தற்போது சிகிச்சைக்கு மருத்துவமனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு தற்பொழுது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் சரியில்லாத நிலையில்  சென்னையில் உள்ள புழல் சிறையில் படுத்த படுக்கையாக இருக்கிறார். 

கடந்த வருடம் ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே நீடிக்கப்பட்டிருந்த காவல் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலில் முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் படுத்த படுக்கையாக இருப்பது போன்று காணப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு என்ன ஆனது என்ற நீதிபதி கேட்ட பொழுது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி மயக்கம் போன்றவையால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீதிபதி நீடித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 52 வது முறையாக நீடித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருவதோடு இப்படி நீதிமன்ற காவல் விசாரணை நீடித்துக் கொண்டே செல்லும் நிலையில் செந்தில் பாலாஜியின் நிலைமை இப்படி ஆகி வருகிறது என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த செய்தி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து விசாரித்தசமயம் இனி ஜாமீன் வாங்கவேண்டும் என்றால் செந்தில்பாலாஜி உடல்நிலையை மட்டுமே காரணம் காட்ட முடியும், அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் இருந்து இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது எனவும் உடல்நிலையை காரணம் காட்டிவருவதாகவும் சில தகவல்கள் கசிகின்றன....