தமிழ் சினிமாவில் கிராமத்து திரைப்படங்கள் பலவற்றால் நல்ல வரவேற்பை கண்டு ஒரு கிராமத்தின் இளைஞனாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷால். ஏனென்றால் விஷாலின் நடிப்பை வெளியான சண்டக்கோழி திமிரு, தாமிரபரணி ஆகிய படங்கள் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது மேலும் குடும்ப பாங்கான படங்களான பூஜை, ஆம்பள மற்றும் சண்டக்கோழி 2 அதை திரைப்படங்களில் விஷாலின் நடிப்பிற்கு பாராட்டுகளை பெற்றது. மேலும் முன்னாள் முதல்வர் மறைந்த பிறகு அவரது ஆர்கே தொகுதி காலியாக இருக்க அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற ரத்தினம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் நிச்சயமாக 2026 லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் புதிய கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட போகிறாரா அல்லது ஏற்கனவே உள்ள கட்சியில் இணைந்து தேர்தல் எதிர் கொள்ளப் போகிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும் விஷால் குறித்த சமீபத்திய செய்திகள் அனைத்துமே பரபரப்பாக வெளியாகி வருகிறது. அதாவது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சமீபத்தில் பேசிய விஷால் சினிமா துறையில் அரசு தலையிட வேண்டாம் என்று கூறியிருந்தார் அது மட்டுமின்றி கடந்த ஆட்சியில் சினிமாவில் அரசு தலையிடவில்லை ஆனால் இந்த ஆட்சியில் சினிமாவில் அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
விஷாலின் இந்த பேச்சு திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனை அடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை பொறுப்பற்ற முறையில் கையாண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது, மேலும் இது குறித்த விசாரணையில் ரூபாய் 12 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்த இழப்பிற்கு விஷால் பதிலளிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமின்றி விஷால் நடிப்பில் படம் தயாரிக்கும் பொழுது தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆலோசனை பெற்ற பிறகு படவேலைகளை தொடங்க வேண்டும் என்று விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் தரப்பு ரெட் கார்டு பறந்தது. முன்னதாக நடிகர் விஷாலின் ரூபாய் 21.29 கோடி கடனை லைக்கா பட தயாரிப்பு நிறுவனம் அடைத்ததை நடிகர் விஷால் இதுவரை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார், அதோடு அவர் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி விஷால் படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாகவும் லைக்கா நிறுவனம் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது விஷால் நீரில் ஆஜராகி பதிலளித்தார்.
அப்பொழுது இப்படிப்பட்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும் தன்னிடம் வெத்து பேப்பரில் தான் கையெழுத்து பெறப்பட்டது என்றும் கூறியுள்ளார் விஷால். அதற்கு நீதிபதி நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல, கவனமாக பதிலளிக்க வேண்டும் என்று கண்டித்தார். அதற்கு நீதிபதியிடம் கேள்விக்கு பாஸ் என விஷால் கூற முற்பட உடனே நீதிபதி அவரை தடுத்து நிறுத்தி இப்படி எல்லாம் பேசக்கூடாது, கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்ற பதில்களை நேராக கூற வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுரை வழங்கி இந்த வழக்கை அடுத்த தினத்திற்கு ஒத்தி வைத்தார். இதனை அடுத்து இரண்டாவது நாளாக நேற்று விஷாலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது அப்பொழுது சாட்சி கூண்டிலே விஷால் நின்றவாறு கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு 2:30 மணி நேரம் பதில் அளித்துள்ளார். குறுக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு மீதான மறுவிசாரணையை செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி! மேலும் இந்த வழக்கில் விஷாலுக்கு அரசியல் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குறிப்பாக விஷால் சமீப சில காலங்களாக அரசியல் ரீதியிலான கருத்துக்களை கூறிவருவதால் ஆளும்கட்சி தரப்பில் இருந்து இந்த அழுத்தம் எனவும் கூறப்படுகிறது...